NEET PG 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு – கட் ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரம் இதோ!

0
NEET PG 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு - கட் ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரம் இதோ!
NEET PG 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு - கட் ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரம் இதோ!
NEET PG 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு – கட் ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரம் இதோ!

மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்படும் NEET PG நுழைவு தேர்வுகளுக்கான பொதுப் பிரிவு மற்றும் EWS மாணவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 275 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் natboard.edu.in என்ற இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.

நீட் நுழைவுத்தேர்வு:

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் NEET நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டும். அந்த வகையில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS), மருத்துவ அறிவியல் படிப்புகளுக்காக நடத்தும் NEET PG 2022க்கான முடிவுகளை ஜூன் மாதம் 1ம் தேதியன்று அறிவித்தது. இப்போது நாட்டில் உள்ள சுமார் 42,000 முதுகலை மருத்துவ இடங்களுக்கான நுழைவுத் தேர்வை 2 லட்சத்துக்கும் அதிகமான எம்பிபிஎஸ் பட்டதாரிகள் எழுதியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் NEET PG தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொதுப் பிரிவு மற்றும் EWS மாணவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 800க்கு 275 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் 260 ஆகவும், SC/ST/ மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 245 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு மற்றும் ஆலோசனைகளை நடத்தும் அமைப்புகள், தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இப்போது NEET PG 2022 நுழைவுத்தேர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் இருந்ததால், இரண்டு கேள்விகள் தொழில்நுட்ப ரீதியாக தவறாக இருப்பதாக NBE கூறியது. அதனால், இந்தக் கேள்விகளை அனைத்து விண்ணப்பதாரர்களும் முயற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் நடக்கும் NEET நுழைவுத்தேர்வு இந்த முறை கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த செப்டம்பரில் தாமதமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!