நீட் தேர்வு: கலந்தாய்வில் இதை செய்தால் இனி தேர்வு எழுத முடியாது – வெளியான அதிரடி அறிவிப்பு!

0
நீட் தேர்வு: கலந்தாய்வில் இதை செய்தால் இனி தேர்வு எழுத முடியாது - வெளியான அதிரடி அறிவிப்பு!
நீட் தேர்வு: கலந்தாய்வில் இதை செய்தால் இனி தேர்வு எழுத முடியாது - வெளியான அதிரடி அறிவிப்பு!
நீட் தேர்வு: கலந்தாய்வில் இதை செய்தால் இனி தேர்வு எழுத முடியாது – வெளியான அதிரடி அறிவிப்பு!

முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடிக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வின் போது மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இந்த இடங்களுக்கு 2 கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இதில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்கள் மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் 2021-2022 கல்வியாண்டு முதல் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்கள் மீண்டும் கொடுக்கப்படமாட்டாது என மத்திய மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த இடங்கள் காலியாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு தற்போது 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – கவனம் மக்களே! வானிலை அறிக்கை!

இந்த 4 கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கட்டாயமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்யாமல் ரத்து செய்பவர்கள் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத முடியாது எனவும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!