நீட் தேர்வு முடிவுகள் 2020 அக்டோபர் 16 தேதி வெளியீடு !!
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவு வரும் 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 14,37,000 மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இத்தேர்வு முடிவானது நேற்று வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரும் 16 தேதி அன்று நீட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இத்தேர்வுக்கான விடைக்குறிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது. அதன்படி, நீட் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் – ஆப் விவரம் உள்ளிட்டவை இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை ntaneet.nic.in என்ற இணையதளம் அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பார் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தங்களது தேர்வு முடிவை வரும் அக்டோபர் 16 ஆம் தேதி காணலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்