நாடு முழுவதும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
நாடு முழுவதும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு!!நாடு முழுவதும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு 2021:

தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவித்த போதிலும் 5 ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த நீட் தேர்வு காரணமாக பல ஏழை மாணவர்களுக்கு தகுதி இருந்தும் மாணவர் சேர்க்கை கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்த தேர்வை வருடத்தில் இரண்டு முறை நடத்தவேண்டும் எனவும் ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கை குறித்து தேசிய தேர்வு முகமை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என பதில் அளித்துள்ளது.

Download NEET Exam Date 2021

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்த தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு முதல் B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை – கோரிக்கை மனு!!

ஏற்கனவே சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 4 ஆண்டுகள் நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!