தமிழக அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

0
தமிழக அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழக அரசுப்பள்ளிகளில் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

நீட் பயிற்சி

இந்தியாவில் மருத்துவ படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களின் கனவுக்கு தடையாக இருப்பதாக கருதிய சில மாநில நிர்வாகங்கள் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை எழுப்பி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

எனினும் இந்த நுழைவுத்தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் விருப்பமாக இருந்தாலும், மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், ‘தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மாறி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஆகும்.

CIBA நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பயிற்சிக்காக 16,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரக்கூடாது என்பது எங்கள் எல்லாருடைய விருப்பமாக இருந்து வருகிறது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அரசுப்பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!