இந்தியாவில் நீட் தேர்வு 2022 ஒத்திவைப்பு? வலுக்கும் போராட்டம்!

0
இந்தியாவில் நீட் தேர்வு 2022 ஒத்திவைப்பு? வலுக்கும் போராட்டம்!
இந்தியாவில் நீட் தேர்வு 2022 ஒத்திவைப்பு? வலுக்கும் போராட்டம்!
இந்தியாவில் நீட் தேர்வு 2022 ஒத்திவைப்பு? வலுக்கும் போராட்டம்!

இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவு தேர்வான NEET தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு

மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் உருவாகி வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீட் 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரி கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்த மருத்துவ மாணவர்கள் இப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, மாணவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்னிபாத் திட்டம்: பெண்களுக்கு முதல் தொகுப்பில் முக்கியத்துவம் – இந்திய கடற்படை அறிவிப்பு!

மேலும் தங்களது குறைகளை பிரதமர் கேட்க வேண்டும் என்றும் மாணவர்கள் விரும்புகின்றனர். இதற்கிடையில், பெரும்பாலான மாணவர்கள் சலோ மோடி ஆவாஸ் அதாவது மோடியின் இல்லத்திற்கு செல்வோம் என்ற ஹேஷ்டேக்குடன் நீட் தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக சில ட்வீட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியை தொடங்குவதாகவும் மருத்துவ ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நிகழ்வு தற்போது இந்திய மக்களின் கவனம் ஈர்க்க துவங்கி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, தேர்வுக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் இல்லை என்று கூறி மருத்துவ நுழைவுத்தேர்வை 40 நாட்களுக்கு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், CUET உள்ளிட்ட பிற நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் நீட் தேர்வு இடம்பெறுவதால் மாணவர்கள் சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்று கருதுகின்றனர். அதனால் இந்த ஆண்டு நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாணவர்கள் ஆன்லைனில் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் இப்போது அடுத்த கட்டமாக போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த ஆண்டு 18.72 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் NEET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பதிவு எண்ணிக்கை ஆகும். இந்த NEET-UG தேர்வு என்பது இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS), பல் அறுவை சிகிச்சை இளங்கலை (BDS), இளங்கலை ஆயுர்வேதம், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS), சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (BSMS), இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS) மற்றும் BSc (H) நர்சிங் ஆகிய படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!