உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா – பிரதமர் மோடி வாழ்த்து!

0
உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா - பிரதமர் மோடி வாழ்த்து!
உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா - பிரதமர் மோடி வாழ்த்து!

உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா – பிரதமர் மோடி வாழ்த்து!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இருப்பினும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளார்.

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து:

18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்று உள்ளார். நீரஜ் சோப்ரா தகுதி சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு இறுதி போட்டி நடந்தது. இன்றைய இறுதிபோட்டியில் நீரஜ் சோப்ரா தனக்கான முதல் வாய்ப்பில் ‛பவுல்’ செய்தார்.

மீண்டும் பாக்கியாவை ஏமாற்ற திட்டம் போட்டு மாட்டிக் கொண்ட கோபி – பாக்கியாவின் முடிவு என்ன?

இதையடுத்து 2வது வாய்ப்பில் 82.39 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 3வது வாய்ப்பில் 86.37 மீட்டர் தொலைவுக்கும் ஈட்டியை வீசினார். இதன் மூலம் அவர் பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். இதையடுத்து நீரஜ் சோப்ரா தனது 4 வது வாய்ப்பில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசி 2வது இடம் பிடித்தார். 5வது மற்றும் 6வது வாய்ப்பை ‛பவுல்’ செய்தார். மேலும் 5வது, 6வது வாய்ப்பை நழுவவிட்டாலும் கூட 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இந்த போட்டியில் அவர் முதல் இடத்தை பிடித்தால் 39 ஆண்டு இந்திய வரலாற்றில் தங்கம் வென்ற முதல் வீரர் என்று சரித்திரத்தை படைத்திருப்பதார். இருப்பினும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பலதரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம் என புகழாரம் சூட்டினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!