உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை – தங்க வென்று முதலிடம்!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப்:
இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தை பிடித்தார். மேலும் யூஜின் நகரில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளில் வெள்ளி பதக்கத்தை வென்றார். இந்நிலையில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் கலந்துகொண்டு முதல் சுற்றில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.77 மீட்டர் தூரத்துக்கு எய்து, 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை வென்றார்.
பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்க திட்டம் – யார் யாருக்கு தெரியுமா?
இதனை தொடர்ந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் நீரச் சோப்ரா, டிபி மானு மற்றும் கிஷோர் ஜேனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நீரச்சோப்ரா ஆறு வாய்ப்புகளில் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இப்போட்டிகளில் பாகிஸ்தானின் அர்ஷத் நதிம் இரண்டாம் இடம் மற்றும் செக் குடியரசை சேர்ந்த யாக்கூப் மூன்றாம் இடத்தையும் பெற்று முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.