ஒரு வேப்பங்குச்சியின் விலை ரூ.1800 – அமெரிக்க நிறுவனத்தின் வியாபார யுக்தி!

0
ஒரு வேப்பங்குச்சியின் விலை ரூ.1800 - அமெரிக்க நிறுவனத்தின் வியாபார யுக்தி!
ஒரு வேப்பங்குச்சியின் விலை ரூ.1800 - அமெரிக்க நிறுவனத்தின் வியாபார யுக்தி!
ஒரு வேப்பங்குச்சியின் விலை ரூ.1800 – அமெரிக்க நிறுவனத்தின் வியாபார யுக்தி!

அமெரிக்காவில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று வேப்பங்குச்சியை ரூபாய் 1800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பங்குச்சி:

வேம்பில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளது. இந்தியாவில் வேப்ப மரங்கள் அதிகம் உள்ளது. தீராத நோய்களுக்கும் வேம்பு தீர்வை அளிக்கிறது. நாம் நாட்டில் வீட்டுக்கு ஒரு வேப்ப மரங்கள் இருப்பது வழக்கம் அதிலும் கிராமங்களில் அதிகம் வேப்ப மரங்கள் காணப்படுகிறது . வேப்பிலை சாறு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வேப்ப இலை சாறு பயன்படுத்தப்பட்டது.

தமிழக ரேஷன் கடைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – அரசின் நடைமுறைகள் வெளியீடு!

பலங்காலத்தில் நம் முன்னோர்கள் பல் துலக்கும் போது வேப்பங்குச்சி பயன்படுத்துவது வழக்கம். இந்த வேப்பங்குச்சி பற்களில் உள்ள கிருமிகளை அகற்றி வாய் தூறு நாற்றத்தை அகற்றுகிறது. வேப்பங்குச்சி மூலம் பல் துலக்குவதனால் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இந்தியாவில் காணப்படும் முக்கிய மூலிகைகளில் முதன்மையானது இந்த வேம்பு தான். இந்த வேம்பிலிருந்து பல வகையான அழகு சாதன பொருட்கள், மருத்து பொருட்கள் போன்றவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம் ஊரில் எளிதாக கிடைக்கும் வேப்பங்குச்சி அமெரிக்காவில் 1800 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

தமிழகத்தில் செப்.10ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அமெரிக்காவில் வேப்பங்குச்சியை ஆர்கானிக் டூத்பேஸ்ட் என்று குறிப்பிட்டு அமெரிக்காவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம் ஒரு வேப்பங்குச்சியை ரூ.1800க்கு விற்பனை செய்து வருகிறது. இந்த விலையை அறிந்த இந்திய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் வேம்பு கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!