ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் கார்டு அத்தியாவசியமான ஒன்றாகும். அதனால் இதிலுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். தற்போது உங்களின் முகவரியை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து சேவைகளை பெற முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் சேவைகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கியமானதாக விளங்குகிறது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் மற்ற ஆவணங்களில் இருப்பதை போல சரியானதாக இருக்க வேண்டும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.

மொத்த இணையத்தளத்தையே சிரிக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் – வைரலாகும் வீடியோ!

இப்போது உங்களின் ஆதாரில் உள்ள முகவரியில் நீங்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை எனில் அதனை கட்டாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் மற்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியை விட மாறுபட்டதாக இருப்பின் நீங்கள் கட்டாயமாக முகவரியை மாற்ற வேண்டும். இதனை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையிலும் அல்லது நேரடி முறையிலும் மாற்றலாம். மேலும் நேரடி முறையில் ஆதார் சேவா கேந்திரா என்ற அலுவலகத்திற்கு சென்று விவரங்களை புதுபிக்க்கலாம். மத்திய அரசு தபால் நிலையங்கள், வங்கி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை புதுப்பிப்பு சேவைகள் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் https://uidai.gov.in/. என்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், ‘My Aadhar’ என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

2. இப்போது தோன்றும் பக்கத்தில் “Update Your Aadhar section” என்ற பகுதியில் , ‘Update Demographics Data and Check Status’ என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

4. அதன் பிறகு கேப்ட்சா குறியீடு பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இப்போது இந்த OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

6. அதன் பின்பு தோன்றும் பக்கத்தில் “Update Aadhar Online” என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதில் ‘Proceed to Update Aadhar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

7. இப்போது பழைய முகவரி காண்பிக்கப்படும். இப்போது புதிய முகவரியை புதுப்பிக்க வேண்டிய விருப்பம் தோன்றும்.

8. இறுதியாக புதிய வீட்டு முகவரி, கட்டட எண், சம்பந்தப்பட்ட நகரம், பின்கோடு போன்றவற்றை உள்ளிட்டு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!