நடிகர் சஞ்சீவ் & ஆலியா மானஸா நடிப்பில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீசன் 2? ப்ரோமோ ரிலீஸ்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி சமீபத்தில் முடிவடைந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியலின் 2ம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், அதில் நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸா இருவரும் லீட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
புதிய சீரியல்
கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்த ஒரு முக்கியமான சீரியல் ‘நீதானே என் பொன்வசந்தம்’ சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் முன்னணி சினிமா நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் புதுமுகம் தர்ஷனா ஆகியோருடன் பல சின்னத்திரை பிரபலங்களும் நடித்திருந்தனர். தன்னை விட அதிகளவு வயதுடைய சூர்யா எனும் பிசினஸ் மேனை காதலித்து கரம் பிடிக்கிறார் இளம்பெண் அனு. இவர்களது காதல், திருமணம் போன்ற கதைக்களத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்தது இந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியல்.
விஜய் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பாரதி கண்ணம்மா” ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
குறிப்பாக தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக புதிய பிரம்மாண்டத்துடன் எடுக்கப்பட்ட ஹெலிகாப்டர் ப்ரபோசல் போன்ற சில சூப்பர் காட்சிகளும் இந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியலில் இடம்பிடித்து ரசிகர்ளின் கவனம் ஈர்த்திருந்தது. என்றாலும் கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் மட்டுமே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியல் கடந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் இந்த சீரியலின் 2ம் பாகம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் அதில் முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்களான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா நடிக்க இருப்பதாகவும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீசன் 2ல் நடிகை ஆலியா மானஸா நித்யா என்ற கதாபாத்திரத்தில், நடிகர் சஞ்சீவ் வருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.