உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியல் – இந்திய பிரதமர் மோடி முதலிடம்!!

0
உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியல் - இந்திய பிரதமர் மோடி முதலிடம்!!
உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியல் - இந்திய பிரதமர் மோடி முதலிடம்!!
உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியல் – இந்திய பிரதமர் மோடி முதலிடம்!!

உலகில் திறமை மிக்க தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி முதலிடம்:

இந்தியாவில் மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாம் முறை பிரதமரானார். இவர் இந்தியாவின் 14 வது பிரதமராவார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது என்று முன்னணி சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. பதவியேற்ற நாள் முதல் இந்திய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

ஜூன் 20 முதல் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வெளியான தகவல்!

தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் நாட்டிற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாநிலங்கள் வாரியாக கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு மாநில முதல்வர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவ்வப்போது காணொளி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். மாநிலங்களுக்கு தேவையான நிதிகளை போர்க்கால அடிப்படையில் வழங்குகிறார். மாநிலங்களுக்கு தொற்று பரவலை தடுக்க முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலக தலைவர்களில் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 66 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். 65 சதவீத ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 2வது இடத்திலும், 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதற்கு முன் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!