திருமணத்திற்கு பத்திரிகை வைக்க தொடங்கிய நயன் – விக்கி ஜோடி – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

0
திருமணத்திற்கு பத்திரிகை வைக்க தொடங்கிய நயன் - விக்கி ஜோடி - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
திருமணத்திற்கு பத்திரிகை வைக்க தொடங்கிய நயன் - விக்கி ஜோடி - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
திருமணத்திற்கு பத்திரிகை வைக்க தொடங்கிய நயன் – விக்கி ஜோடி – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு வருகிற ஜூன் 9ல் திருமணம் என பேசப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதிபடுத்தும் விதமாக தங்களது திருமண பத்திரிகையை முக்கியமான நபரிடம் கொடுத்து தொடங்கியுள்ளனர்.

நயன்தாரா திருமணம்:

தமிழ் சினிமா துறையில் ஒரு கலக்கு கலக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழிக்கு சொந்தக்காரராகிய நயன்தாரா அவர்களுக்கு வருகிற ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் எழுத்தாளர் என பல அம்சங்களை கொண்ட விக்னேஷ் சிவன் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ள தகவல் இணையத்தில் காட்டு தீயாக பரவி வந்தது. ஆனால் இதை குறித்ததான எவ்வித தகவலும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வெளிவராமல் இருந்தது.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகர் – சூடுபிடிக்கும் சீரியல்!

இப்படி இருக்கையில் ஒரு பக்கம் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இணையத்திலும், பொது இடங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் அவர்களை சந்திக்கும் பொழுதிலும் தெரிவித்து வந்தனர். அதை தொடர்ந்து சமீபத்தில் இருவரும் அவர்களது கல்யாண பத்திரிக்கையை கொடுக்கும் வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது சமூக வலைதளத்தில் வைரலாகிய ஒரு புகைப்படம் மூலம் உறுதியாகியுள்ளது. அட ஆமாங்க! நயன்தாரா மாற்றும் விக்னேஷ் அவர்கள் தங்களது திருமண பத்திரிகையில் முதல் பத்திரிகையை தமிழக முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொடுப்பது போல் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

Exams Daily Mobile App Download

இதை பார்த்த ரசிகர்களும், நட்சத்திரங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த மயமாக உள்ளனர். இவ்வாறு முக்கிய நபர்களுக்கு மட்டும் இருவரும் சேர்ந்து நேரில் சந்தித்து கொடுத்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் இருவரது ஜோடி பொருத்தமும் பார்ப்பதற்கே அழகாகவும், கல்யாண கலை வந்து விட்டதும் தெரிகிறது. மேலும் மஹாபலி புரத்தில் திருமணமும், சென்னையில் பெரிய ஹோட்டலில் ரிசெப்ஷன் நடக்கப்போவதாக டாக் ஒரு பக்கம் இருக்க ஒட்டு மொத்த சினி நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெரும் என்ற ஆசையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!