திருமண மேடையில் கண்கலங்கிய செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

0
திருமண மேடையில் கண்கலங்கிய செய்தி வாசிப்பாளர் கண்மணி - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
திருமண மேடையில் கண்கலங்கிய செய்தி வாசிப்பாளர் கண்மணி - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
திருமண மேடையில் கண்கலங்கிய செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

அன்றாட வாழ்வில் தினமும் செய்திகள் பார்ப்பது தாண்டி இவங்களுக்காகவே செய்தி பார்க்கும் அளவுக்கு மக்கள் மனதை ஈர்த்த செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் சின்னத்திரை நடிகர் நவீனுக்கும் நிச்சயமானதை அடுத்து தற்போது இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அப்போது கண்மணி திருமண மேடையில் கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்கலங்கிய கண்மணி:

சின்னத்திரை நடிகைகளை தாண்டி சில செய்திவாசிப்பாளர்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு க்ரஷ் இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த வரிசையில் அதிக அளவு இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் தான் செய்திவாசிப்பாளர் கண்மணி. இவர் அழகிலும், தமிழ் வாசிக்கும் விதத்திலும் பார்வையாளர்களை தன் வசம் ஈர்த்தவர் என்றே சொல்லலாம். அனிதா சம்பத்தை போலவே கண்மணியும் பிக் பாஸுக்கு வருவார், அப்படியே ஹீரோயின் ஆகி விடுவார் என ரசிகர்கள் ரொம்பவே கனவு கண்டு வந்தனர்.

மயூவிற்காக மனம் மாறும் ராதிகா, கோபியை ஏற்றுக் கொள்வாரா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த திருப்பம்!

ஆனால் இவரோ சினிமா துறையில் பல வாய்ப்புகள் வந்தும் விருப்பம் காட்டாமல் செய்திகள் வாசிப்பதே என் கனவும் ஆசையும் என்று தவிர்த்து விட்டார். இப்படி இருக்கையில் சமீபத்தில் இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன் அவர்களுடன் குடும்பத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அந்நிகழ்வின் புகைப்படங்கள் நவீன் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை உண்டாக்கியது தான் மிச்சம். ஏனெனில் பல இளம் பெண்களின் இதயத்தை திருடிய கனவு கண்ணன் தான் சின்னத்திரை நடிகர் நவீன். அவர் நடித்த முதல் சீரியலிலேயே வேற லெவல் பிரபலம் அடைந்தவர் ஆனார்.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து நேற்றைய தினம் ஜூன் 10ல் செய்திவாசிப்பாளர் கண்மணி சீரியல் நடிகர் நவீனை கரம் பற்றி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார். கோலிவுட் பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இரவு கலந்து கொண்டனர். சுபமுகூர்த்தத்தில் கண்மணியின் கழுத்தில் நடிகர் நவீன் தாலி கட்டிய பிறகு அதை தொட்டுப் பார்த்து கண் கலங்கும் வீடியோ யூடியூப் சேனல்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here