இயற்கையாகவே கருவுற்ற முல்லை – ஆச்சரியத்தில் கதிர்! குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி!

0
இயற்கையாகவே கருவுற்ற முல்லை - ஆச்சரியத்தில் கதிர்! குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி!
இயற்கையாகவே கருவுற்ற முல்லை - ஆச்சரியத்தில் கதிர்! குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி!
இயற்கையாகவே கருவுற்ற முல்லை – ஆச்சரியத்தில் கதிர்! குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி!

முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் முல்லை இயற்கையாகவே கருவுறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நிறைய செலவாகும் என்பதால் என்ன செய்வதென தெரியாமல் குடும்பத்தினர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.

புலியுடன் போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி – வைரலாகும் புகைப்படம்! குவியும் லைக்குகள்!

இந்நிலையில் மூர்த்தி தற்போது நமக்கு குழந்தை தான் முக்கியம். எனவே, தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என கூறி விடுகிறார். குடும்பத்தினர்கள் அனைவரும் மூர்த்தி கூறியது ஆச்சரியமாக இருந்தாலும் குடும்பத்தினர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், மீனாவிற்கு மட்டும் சுத்தமாக பிடிக்கவில்லை. அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை ஏன் முல்லைக்காக நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி சண்டை போடுகிறார். இதற்குப் பிறகும் முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

பாக்கியா பிரச்சனையை கண்டு கொள்ளாத கோபி, கோவப்படும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மீனா பேசியதை குறித்து முல்லையும் மிகவும் கவலைப்படுகிறார். பின்பு முல்லை குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என ஒருவர் கூறிவிடுகிறார். ஆனால், பரிகாரம் செய்ய குடும்பத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. என்ன செய்வதென தெரியாமல் முல்லை விழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் முல்லைக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவது போல உணர்வு ஏற்படுகிறது. இது கர்ப்பமாக இருக்குமோ என முல்லை கதிரிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here