செயற்கை முறை சிகிச்சை தோல்விக்கு பிறகு இயற்கையாகவே கருவுறும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
செயற்கை முறை சிகிச்சை தோல்விக்கு பிறகு இயற்கையாகவே கருவுறும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
செயற்கை முறை சிகிச்சை தோல்விக்கு பிறகு இயற்கையாகவே கருவுறும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
செயற்கை முறை சிகிச்சை தோல்விக்கு பிறகு இயற்கையாகவே கருவுறும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

முல்லைக்கு கடந்த வாரத்தில் இருந்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற்ற வேளையில் இந்த சிகிச்சை இந்த முறை வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயற்கையாகவே முல்லை கருவுறும் படியாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு இயற்கையாக குழந்தை பிறக்காது என்பதால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். இந்த சிகிச்சைக்கு தேவையான 5 லட்ச ரூபாய் பணத்தையும் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி சிகிச்சைக்கு தயாராகினர். இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை அனைவருக்கும் வெற்றியை கொடுக்காது.

Exams Daily Mobile App Download

ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். இந்த ஐந்து லட்சத்தை திரட்டவே குடும்பத்தினர்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும் என்றால் அதுவும் மிகவும் கஷ்டம். இதனால் எப்படியாவது இந்த சிகிச்சை வெற்றி பெற்றே தீர வேண்டும் என குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் ரசிகர்களும் வேண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக முல்லைக்கு வயிற்றில் அந்த கரு தங்கவில்லை.

ஐந்து லட்ச ரூபாய் வீணாகி விட்டதே என குடும்பத்தினர் அனைவரும் கவலையில் இருக்கின்றனர். முல்லையும் வீட்டிற்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்து விட்டோம் என மன அழுத்தத்தில் இருக்கிறார். தன்னால் ஒரு குழந்தையை கூட பெற்றுக் கொள்ள முடியாதா? என தன்னை தானே திட்டிக் கொண்டு அழுதபடி இருக்கிறார். இந்நிலையில் முல்லை இயற்கையாகவே கருவுறும் படியாகவும், தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை முல்லையாலே ஏற்றுக்கொள்ள முடியாதபடியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here