நாடு முழுவதும் அமலாகும் WFH முறை – அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அரசு முடிவு!

1
நாடு முழுவதும் அமலாகும் WFH முறை - அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அரசு முடிவு!
நாடு முழுவதும் அமலாகும் WFH முறை - அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அரசு முடிவு!
நாடு முழுவதும் அமலாகும் WFH முறை – அலுவலக ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அரசு முடிவு!

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அலுவலக ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை (WFH) அதிகாரப்பூர்வமாக செயல்படுத்த நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த ஒப்புதல் கிடைத்தால் ஊழியர்கள் இனி நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும்.

WFH முறை

உலகளவில் கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த WFH முறை அலுவலக ஊழியர்களின் இயக்கம் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் அதிக நெகிழ்வுத்தன்மையை உருவாக்கி தருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் உள்ள அலுவலக ஊழியர்களுக்கு இந்த WFH முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இந்த WFH முறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இப்போது, நெதர்லாந்து அரசாங்கம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வ உரிமையாக்க திட்டமிட்டு வருகிறது. மேலும், டச்சு பாராளுமன்றத்தின் கீழ் ஏற்கனவே இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் இது குறித்த மசோதா செனட்டின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டால், ஊழியர்கள் ரிமோட் முறையில் வேலை செய்யும் நெகிழ்வுத்தன்மையை சட்டப்பூர்வமாக வழங்கும் முதல் நாடாக நெதர்லாந்து மாறும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்? அமைச்சர் விளக்கம்!

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர்களின் உரிமைகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஊழியர்களுக்கு சிறந்த வேலை வாழ்க்கை சமநிலையை வழங்குவதோடு, அவர்களின் பயண நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, தொழிலாளர்களுக்கு நல்ல வேலை நிலைமைகளை உறுதி செய்யும் சில நாடுகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இந்நாடு வாரத்திற்கு சராசரியாக 29.5 மணி நேரம் வேலை முறையை தனது ஊழியர்களுக்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. உலகம் முழுவதும் WFH வாய்ப்பு அனைத்து துறைகளிலும் கொண்டு வர வேண்டும். ஆன்லைன் தேர்வு வழி வெளி நாட்டு வேலை வாய்ப்புகளை திறமையான மாணவர்கள் பயன்படுத்த ஒரு‌சிறந்த வாய்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!