செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

0
செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
செப் 27ம் தேதி வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பந்த் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் செப்டம்பர் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

வேளாண் சட்டம்:

வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20 மற்றும் 22ம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவம் பெற்றது. இந்த புதிய வேளாண் சட்டங்களின் அம்சங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் போனது.

ஒரே நாளில் நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி – பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை!

மத்திய அரசின் சட்டத்தினால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் தான் ஏற்படும் என்றும், இதன் மூலம் அந்நிய நிறுவனங்கள் மட்டுமே பலனடையும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதற்காக கடந்த ஆண்டில் ஒரு முறை பந்த் நடத்தப்பட்டது. தற்போது, ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் கீழ் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று ஒரு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், பந்த் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை செயல்படாது. தனியார், அரசு வாகன போக்குவரத்துகள் நிறுத்தப்படும். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த பந்த் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடர்ந்து மூன்று புதிய சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அவற்றில் திருத்தங்களை மட்டுமே செய்ய முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!