நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு – 11:40 மணியில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி!

0
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு - 11 40 மணியில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி!
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு - 11 40 மணியில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு – 11:40 மணியில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி!

நாடு முழுவதும் இன்று கிட்டத்தட்ட 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர். மேலும், 11:40 மணியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த கல்வி ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை வெளியீடு!

மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த வெள்ளிக்கிழமை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. மேலும், நீட் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் தேர்வு அறையில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, தேர்வு மையத்திற்குள் செல்ல 11:40 மணியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வர்கள் கட்டாயமாக தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் எனவும், அதற்குப் பிறகு தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்றால் உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை போன்றவற்றை கட்டாயமாக தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், இவற்றில் ஏதோ ஒன்று இல்லை என்றாலும் தேர்வர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வர்கள் தங்களது கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் மற்றும் சேனிடைசர் பாட்டில்களை எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கட்டாயமாக தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தவறினால் விடைத்தாள் திருத்தத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா பரவலும் அதிகரித்துவரும் காரணத்தினால் கொரோனா வழிகாட்டுதல் நடவடிக்கைகளை கட்டாயமாக நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here