டெல்லியில் நாளை தேசிய நல்லாசிரியர் விருது – பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!

0
டெல்லியில் நாளை தேசிய நல்லாசிரியர் விருது - பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!
டெல்லியில் நாளை தேசிய நல்லாசிரியர் விருது - பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!
டெல்லியில் நாளை தேசிய நல்லாசிரியர் விருது – பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!

டெல்லியில் நாளை தேசிய நல்லாசிரியர் விருதை இந்திய குடியரசு தலைவர் வழங்க உள்ளார். இதையடுத்து விருது பெறும் 45 நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

தேசிய நல்லாசிரியர் விருது

இந்தியாவில் கற்பித்தல் முறையில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை பாராட்டும் விதமாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நல்லாசிரியர் விருதை வழங்கி வருகிறது. இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல்லாசிரியர் விருதினை பெற ஆசிரியர்கள் சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இதில் குறிப்பாக பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் உள்ளிட்ட மதிப்பீடுகள் மூலமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

இதையடுத்து பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் போன்ற புறநிலை வகை மதிப்பீடு மூலமாகவும், படைப்பாக்கம், இணை பாடத்திட்டங்களில் புத்தாக்கம், தேசிய வளர்ச்சிக்கான பணிகள் உள்ளிட்டவற்றிக்கான செயல்திறன் மதிப்பீடு மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது இவர்கள் 3 அடுக்கு ஆய்வுக்குப் பின் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் மாவட்ட வாரியாக நல்லாசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியலை மாநிலத் தேர்வு குழு ஆய்வு மேற்கொள்ளும் .

Exams Daily Mobile App Download

இதில் அதிக தகுதியுள்ள ஆசிர்யர்களை தனிநடுவர் குழு பரிந்துரை செய்கிறது. அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களின் செயல்திறன் குறித்து விளக்க வேண்டும். அதன்படி நாடு முழுவதும் இவ்விருதுக்கு 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆசிரியரும் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து இந்த 45 ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்ய உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!