2018 தேசிய விளையாட்டு விருதுகள்

0

2018 தேசிய விளையாட்டு விருதுகள்

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான  தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கடந்த நான்கு ஆண்டுக்காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும்,     கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும்.

பிரபலமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படும், விளையாட்டு மேம்பாட்டுக்கு ஆயுட்கால பங்களிப்புச் செய்தவர்களுக்கு தியான்சந்த் விருது வழங்கப்படும், விளையாட்டு மேம்பாட்டுக்கு பங்களித்த நிறுவனங்களுக்கு, தனி நபருக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு விருது வழங்கப்படும். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற பல்கலைக்கழகத்திற்கு மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை வழங்கப்படும்.

(i)         ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2018

.எண் விளையாட்டு வீரர் பெயர் விளையாட்டு 
1. எஸ். மீராபாய் சானு பளு தூக்குதல்
2. விராட் கோலி கிரிக்கெட்

(ii)        துரோணாச்சார்யா விருது 2018 

.எண் பயிற்சியாளர் பெயர் விளையாட்டு 
சுபேதார் செனானந்த அச்சய்யா குட்டப்பா குத்துச்சண்டை
2. விஜய் சர்மா பளு தூக்குதல்
3. ஸ்ரீ ஏ. ஸ்ரீனிவாச ராவ் டேபிள் டென்னிஸ்
4. ஸ்ரீ சுக்தேவ் சிங் பன்னு தடகளம்
5. ஸ்ரீ கிளாரன்ஸ் லோபோ ஹாக்கி (வாழ்நாள்)
6. ஸ்ரீ தாரக் சின்ஹா கிரிக்கெட் (வாழ்நாள்)
7. ஸ்ரீ ஜீவன் குமார் ஷர்மா ஜூடோ (வாழ்நாள்)
8. ஸ்ரீ வி.ஆர். பீடு தடகளம் (வாழ்நாள்)

  

(iii)       அர்ஜுனா விருது 2018

.எண் விளையாட்டு வீரர் பெயர் விளையாட்டு 
நீரஜ் சோப்ரா தடகளம்
2. நயீப் சுபேதார் ஜின்ஸன் ஜான்சன் தடகளம்
3. ஹீமா தாஸ் தடகளம்
4. திருமதி நெலூர்த்தி சிக்கு ரெட்டி பேட்மிண்டன்
5. சுபேடார் சதீஷ் குமார் குத்துச்சண்டை
6. திருமதி ஸ்மிதி மந்தானா கிரிக்கெட்
7. சுபாங்கர் ஷர்மா கோல்ப்
8. மன்ப்ரீத் சிங் ஹாக்கி
9. சவிதா ஹாக்கி
10. கர்னல் ரவி ரத்தோர் போலோ
11. துப்பாக்கி சுடுதல்
12. அன்கூர் மிட்டல் துப்பாக்கி சுடுதல்
13. திருமதி ஸ்ரேயாசி சிங் துப்பாக்கி சுடுதல்
14. திருமதி. மனிகா பத்ரா டேபிள் டென்னிஸ்
15. ஜி.சத்தியன் டேபிள் டென்னிஸ்
16. ரோஹன் போபண்ணா டென்னிஸ்
17. சுமித் மல்யுத்தம்
18. திருமதி பூஜா கடியன் வுசூ
19. அன்கூர் தமா பாரா-தடகளம்
20. மனோஜ் சர்க்கார் பாரா-பேட்மிண்டன்

(iv)      தியான்சந்த் விருது 2018

.எண் வீரர் பெயர் விளையாட்டு 
சத்யதேவ் பிரசாத் வில்வித்தை
2. பாரத் குமார் சேத்ரி ஹாக்கி
3. திருமதி பாபி அலோய்சியஸ் தடகளம்
4. ஸ்ரீ சௌகேல் தத்து தத்தத்ரே மல்யுத்தம்

(vi) தேசிய விளையாட்டு மேம்பாட்டு விருது 2018

.எண் பிரிவு நிறுவனத்தின் பெயர்
1. வளர்ப்பு மற்றும் இளம் திறமை அடையாளம் மற்றும் வளர்ப்பு ராஷ்ட்ரீய இஸ்பாத் நிகம்
2. கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மூலம் விளையாட்டுக்கு ஊக்குவிப்பு ஜே எஸ் டபிள்யூ ஸ்போர்ட்ஸ்
3. விளையாட்டு மேம்பாட்டு இஷா அவுட்ரீச்

(vii) மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை 2017-18: 

  • அம்ரிஸ்டர் குருநானக் தேவ் பல்கலைக்கழகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இம்மாதம் 25-ம்தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவார்.

PDF DOWNLOAD

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here