தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேசிய திறனாய்வு தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேசிய திறனாய்வு தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேசிய திறனாய்வு தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேசிய திறனாய்வு தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுத தகுதி ஆனவர்கள் ஆவர். இந்த தேர்வு மூலம் அதிகமான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம், மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசு இன்று ஆலோசனை!

தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மேலும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 2021-2022-ம் கல்வியாண்டில் தேசிய திறனாய்வு 2022 மார்ச் மாதம் 05-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு – இன்று (ஜன.27) முதல் தொடக்கம்!

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து ,மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022 என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!