தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை – நிபுணர் குழு அமைப்பு!

0
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை - நிபுணர் குழு அமைப்பு!
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை - நிபுணர் குழு அமைப்பு!
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை – நிபுணர் குழு அமைப்பு!

நாட்டில் தேசிய அளவிலான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்காக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

நிபுணர் குழு அமைப்பு:

தேசிய அளவில் மக்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்காக தொழில்நுட்ப தகவல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான உத்தரவை மத்திய அமைச்சகம் அறிவித்தது. மேலும், இதற்கான குழு ஒன்றையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சம் நியமித்துள்ளது. இந்த குழுவானது அறிவிக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு செயல்படும்.

TN Job “FB  Group” Join Now

பொருளாதார வளர்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் அஜீத் மிஸ்ரா அவர்கள் இந்த குழுவிற்கு தலைமை ஏற்கிறார். கொல்கத்தா ஐஐஎம் பேராசிரியர் தாரிகா சக்ரவர்த்தி, பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் அனுஸ்ரீ சின்ஹா, விபா பல்லா, இணை செயலாளர், வி.வி.கிரி தேசிய தொழிலாளர் மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் எச். சீனிவாஸ் ஆகியோர் இந்த குழுவின் நிபுணர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு – அரசின் முடிவு என்ன

இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மூத்த ஆலோசகர் டி.பி.எஸ் நெகி உள்ளார். தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு இந்த நிபுணர் குழு வழங்கும். ஊதியம் நிர்ணயிப்பதில், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த முறைகள், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல், வழிமுறை ஆகியவற்றை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!