தேசிய செய்திகள் – மே 2019

0

தேசிய செய்திகள் – மே 2019

இங்கு மே மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மே மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – மே 2019

சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஷா மெஹ்மூத் குரேஷி SCO கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, கிர்கிஸ்தான், பிஷ்கேக்கில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கவுன்சிலின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஜெட் அலுவலக இடத்தை எடுத்துக்கொள்ள ஏஏஐ நடவடிக்கை

  • பல விமான நிலையங்களில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகங்களை எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரசபை (ஏஏஐ) தொடங்கியது.

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்

  • கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி தயாரித்து வரும் லேஸ் சிப்ஸ்க்காக காப்புரிமை வாங்கிய FC5 ரக உருளைக்கிழங்கை குஜராத் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் நான்கு விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது பெப்சி நிறுவனம். அதில், நான்கு விவசாயிகளும் தலா 1கோடி வழங்க வேண்டும் என பெப்சி நிறுவனம் கேட்டுக் கொண்டது. உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்.

உச்ச நீதிமன்றம் அயோத்தி மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் வழங்கியது

  • அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், சுமுக தீர்வு காண, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என, மூன்று பேர் அடங்கிய மத்தியஸ்த குழு, உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, ஆகஸ்ட், 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி, கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி (CJI) ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் விசாரதித்தது குறிப்பிடத்தக்கது.

I & B செயலாளர் அமித் காரே தலைமையில் இந்திய பிரதிநிதிகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றனர்

  • இந்தியா பெவிலியன் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை திறந்து வைகைப்பட உள்ளது. இந்த வருடம் I & B செயலாளர் அமித் காரே தலைமையில் இந்திய பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்தது

  • 1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து அறிவித்தது.

CTBTO கூட்டங்களில் பார்வையாளராக இருக்க இந்தியாவிற்கு அழைப்பு

  • விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBTO) நிர்வாகச் செயலாளர், லசினா செர்போ, CTBT இல் ஒரு பார்வையாளராக இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் பார்வையாளராக இருப்பதால், சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் தரவுகளை அணுக இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும், இந்த வசதி 89 நாடுகளில் உள்ள 337 வசதிகளை பயன்படுத்த வழிவகுக்கும்.

இந்திய காண்டாமிருகத்திற்கு டி.என்.ஏ. தரவுத்தளம் அமையவுள்ளது

  • இந்திய நாட்டில் உள்ள அனைத்து காண்டாமிருகத்தின் டிஎன்ஏ விவரங்களையும் உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது. 2021ம் ஆண்டுக்குள், இந்திய காண்டாமிருகம் இந்தியாவில் அதன் அனைத்து இனங்களின் டி.என்.ஏ-வரிசைமுறையை கொண்டிருக்கும் முதல் காட்டு விலங்கு வகைகளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் சுமார் 2,600 காண்டாமிருகங்கள் உள்ளன, அவற்றில் 90% அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு

  • உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை பதவி உயர்வு செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நீதிபதி அனிருதா போஸ், நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா கந்த் ஆகியோர் அந்த நான்கு நீதிபதிகள் ஆவர்.

16வது மக்களவை கலைப்பு – அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 18.05.2014 அன்று அமைக்கப்பட்ட 16வது மக்களவையை கலைக்க ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது

இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தது

  • இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை 1951 ஆம் ஆண்டின் மக்கள் சட்டத்தின் பிரிவு 73 ன் படி பட்டியலை இந்திய குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பித்தது

மே 30 தேதி திரு.நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார்

  • மே 30 ம் தேதி இரவு 7 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

‘டிஜிட்டல் டைலேமா’வின் ஹிந்திப் பதிப்பு

  • தில்லியில் அகாடமி பப்ளிகேஷனின் ஹிந்தி பதிப்பான “டிஜிட்டல் டைலேமா” வை ஜான் பெய்லி, மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி தலைவர் (பிரபலமாக ஆஸ்கார் அகாடமி என அழைக்கப்படுகிறது) தொடங்கி வைத்தார். திரைப்பட சேமிப்பு ஊடகத்தில் தொழில்நுட்ப மாற்றங்களால் பல சவால்கள் உள்ளன என்று ஜான் பெய்லி கூறினார், இந்தப் புத்தகம், திரைப்பட தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் பொருள் குறித்து புரிதல் மற்றும் திட்டமிடல் செய்ய உதவும் எனக்கூறினார்.

கோவா மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படுகிறது

  • மே மாதம் 30 ம் தேதி கோவா மாநில உருவான தினம் கொண்டாடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டில் கோவா இந்திய யூனியனின் 25 வது மாநிலமாக இணைந்தது.

ஜம்மு காஷ்மீர் அறிக்கையை நிராகரித்த ஐ நா

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள மீறல்கள் தொடர்பாக ஜெனீவா அடிப்படையிலான மனித உரிமைகள் கவுன்சில் (HRC) ஐ நாவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் இந்தியா தனது அறிக்கையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

2019ன்  சுகாதார பராமரிப்பு முதலீட்டுக் கொள்கையை வெளியிட்டது.

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு 2019ன் சுகாதார முதலீட்டுக் கொள்கையை வெளியிட்டது. இப்புதிய சுகாதார பராமரிப்பு முதலீட்டுக் கொள்கைப்படி, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் ஊகத்தைத்தொகை அளித்து தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவுள்ளது.

ஜம்மு & காஷ்மீரில் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை திட்டம்

  • 2020 ஆம் ஆண்டில் இறப்பு விகிதத்தை (IMR) குறைக்கும் முயற்சிக்காண திட்டத்தை ஜம்மு & காஷ்மீர் அரசு தீட்டியுள்ளது, இதனால் ஒரு நிலையான வளர்ச்சி இலக்கை அடையும் என்று அம்மாநில அரசு பிரதிநிதி கூறியுள்ளார்.

இந்தோ-பாக் கார்த்தார்பூரின் காரிடோரில் சந்திப்பு:

  • பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானாக் ஆலயத்தை கார்த்தார்பூரின் குருத்வாரா தர்பார் சாஹிபுடன் இணைக்கும் ஒரு நடைபாதையில் நடைமுறைகளை விவாதிக்க பாகிஸ்தான் மற்றும் இந்தியா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டம் கார்த்தார்பூர் ஜீரோ பாயிண்டில் நடைபெற்றது.

Download PDF

Click Here to Read English

தேசிய செய்திகள் Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

சாதனையாளர்களின் பொன்மொழிகள்-Motivational Video 

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!