தேசிய செய்திகள் – ஜூன் 2019

0

தேசிய செய்திகள் – ஜூன் 2019

இங்கு ஜூன் மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019

இந்திய உணவுக் கூட்டுத்தாபனம் சேமிப்பிற்க்கான இடத்தை  அதிகரிக்க திட்டமிட்டுள்ளது

  • 2022 ஆம் ஆண்டளவில் 100 லட்சம் டன் சேமிப்பிடத்தை இலக்காகக் கொள்ளும் வகையில், இந்திய உணவு கழகம் (எஃப்.சி.ஐ.) சேமிப்பகத்தின் கட்டுமானத் திட்டத்தை துரிதப்படுத்த புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
  • கடந்த சில ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அறுவடை மற்றும் அதிக கொள்முதல் மூலம் FCI சேமிப்பகத்தின் உணவுப்பொருட்களின் அளவு தேவைக்கு அதிகமானதை விட  இரண்டு மடங்கு ஆகும்.

91 முக்கிய நீர்த்தேக்கங்களில் வெறும் 20% தண்ணீர் மட்டுமே உள்ளது

  • மேற்கு மற்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு  கடந்த 10 ஆண்டுகளை  காட்டிலும் மிக குறைந்த அளவே உள்ளது எனவும், மேலும் இது மிக  மோசமான தண்ணீர் நெருக்கடியைக் உண்டாக்கும் என மத்திய நீர்நிலை ஆணையம் (CWC) குறிப்பிடுகிறது.
  • குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு மிக குறைந்த பருவ மழை பொழிந்ததால் அம்மாநிலங்களில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலுள்ள நீரின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது மேலும் இதில் மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகம் சுகாதார குறியீட்டில் 6 இடங்கள் பின்சென்றுள்ளது

  • நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார குறியீட்டில் தமிழகம் ஆறு இடங்கள் பின்சென்றுள்ளது. தமிழக அரசு 2015-16 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்திலிருந்து 2017-2018 ஆம் ஆண்டில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து அதன் தரவரிசையில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது .

பீகார் அமைச்சரவை முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்காக 384 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • பீகார் அமைச்சரவை முதலமைச்சரின் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு 384 கோடி ரூபாய் வழங்கவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 60 -79 வயது முதியவர்களுக்கு மாதம் ரூ. 400 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.

2027ம் ஆண்டில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்: ஐ.நா. அறிக்கை

  • 2027 ஆம் ஆண்டில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை முந்த உள்ளது, மேலும் 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.64 பில்லியன் மக்கள் வசிப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறுகிறது.
  • உலகளவில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேகமாக வளர்ந்து வரும் வயதினர் பிரிவில் உள்ளனர். உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகையின் விகிதம் சுருங்குவதால் சமூக பாதுகாப்பு அமைப்புகளுக்கு பதிப்பபை ஏற்படுத்துவதாகவுள்ளது.

406 மாவட்டங்களில் சி.என்.ஜி, மற்றும் பி.என்.ஜி உள்கட்டமைப்பை மத்திய அரசு வழங்க உள்ளது

  • நாட்டின் 406 மாவட்டங்களில் சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி உள்கட்டமைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 2014 வரை நாட்டின் 66 மாவட்டங்கள் மட்டுமே அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் குழாய் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் கீழ் இருந்தன. இந்த வசதிகளை விரிவுபடுத்திய பின்னர், 70 சதவீத மக்கள் சுத்தமான ஆற்றலைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

யுனிவர்சல் ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது

  • ஓட்டுநர் உரிமங்களின் வடிவமைப்பை சிப் அல்லாத லேமினேட் செய்யப்பட்ட கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு வகை ஓட்டுநர் உரிமங்களாக மாற்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமத்தின் பொதுவான தரமான வடிவம் மற்றும் வடிவமைப்பை இந்தத் திட்டத்தில் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது, முக்கிய தகவல்களை வைப்பது, எழுத்துருக்களின் தரப்படுத்தல் போன்றவையும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடி இந்தியா நிகழ்ச்சிகள் வங்கதேசம், தென் கொரியாவில் ஒளிபரப்பப்பட உள்ளது

  • வங்கதேச டி.வி.க்கு சொந்தமான பி.டி.வி வேர்ல்ட் என்ற சேனலை தூர்தர்ஷன் ஃப்ரீ டிஷ்ஷில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது, இதன் மூலம் நம் நாட்டின் தூர்தர்ஷன் பார்வையாளர்கள் வங்கதேசத்தின் பி.டி.வி வேர்ல்ட் சேனலை காண முடியும். அதே நேரத்தில், டி.டி இந்தியா சேனல் வங்கதேசத்தில் உள்ள மக்களால் பார்க்கும் படி அந்நாட்டில் ஒளிபரப்பப்பட உள்ளது.

ஓய்வூதியத் துறையின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் செல் மற்றும் அழைப்பு மையம்

  • வடகிழக்கு மாநில வளர்ச்சி (தனிப் பொறுப்பு), மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஓய்வூதியத் துறைக்கான ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் செல் மற்றும் அழைப்பு மையத்தை திறந்து வைத்தார். இது ஓய்வூதியத்துறை மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையால் அமைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள ஜன்பத் பவனில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு 18 அம்ரித்[AMRIT] கடைகள் திறக்க முடிவு

  • ஜம்மு-காஷ்மீர் அரசு அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகளிலும், மாநிலத்தின் முக்கிய மருத்துவமனைகளிலும் 18 அம்ரித் [AMRIT] (சிகிச்சைக்கான மலிவு மற்றும் நம்பகமான மருந்துகள்) கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இறுதி பயனர்களுக்கு தரமான மற்றும் மலிவு மருந்துகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் ஆகும்.

ஜீலம் நதி மீதான வெள்ள மேலாண்மை பணிகளுக்கான 2 வது கட்ட விரிவான திட்டத்திற்கு ஜே & கே ஒப்புதல் அளித்துள்ளது

  • ஜீலம் நதியில் 5,400 கோடி ரூபாய் செலவில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கான விரிவான திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • செப்டம்பர் 2014 இன் பேரழிவிற்க்கு காரணமான வெள்ளத்தைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெள்ளத்தைத் தணிப்பதற்கும், மத்திய அரசின் மூலம் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் பேரிலும் இந்த பன்முக மூலோபாயம் பின்பற்றப்பட்டது.

மிசோரமில் தன்னார்வ இரத்த தானம் சமூக இயக்கமாக மாறுகிறது

  • மிசோரமில், தன்னார்வ இரத்த தானம் ஒரு சமூக இயக்கமாக மாறியுள்ளது. இந்த இயக்கத்தில், இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தன்னார்வ இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை, இரத்த அலகுகளின் 85 சதவீத தேவைகள் 2018-19 ஆம் ஆண்டில் தன்னார்வ நன்கொடைகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சர்ச் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்க இரத்த பரிமாற்ற கலங்களுடன் இணைந்து இளைஞர்களை இரத்த தானம் செய்வதில் ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மத்திய அரச ஊழியர்களின் குடியிருப்பு வளாகங்களில் ‘சோலார் மரங்கள்’ நிறுவ CPWD திட்டம்

  • அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பு வளாகங்களில் “சோலார் மரங்கள்” நிறுவும் வாய்ப்பை ஆய்வு செய்ய மத்திய பொதுப்பணித் துறை (CPWD) தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதோடு, மத்திய அரசாங்கத்தின் பிரதான கட்டுமான நிறுவனமான CPWD ஆல் கார்பன் தடத்தை குறைக்க முயல்கிறது. குஜராத்தின் தண்டியில் உள்ள தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவகத்தில் “சோலார் மரங்கள்” முதன்முதலாக CPWD ஆல் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வு ராஞ்சியில் நடைபெறவுள்ளது

  • சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி ராஞ்சியில் உள்ள பிரபாத் தாராவில் ஜூன் 21, 2019 அன்று நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்த உள்ளார். ஜார்க்கண்ட் மாநில அரசு இந்த நாளை மிகப் பெரிய முறையில் கொண்டாட வேண்டும் என்று ஒரு வாரம் நீண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஜூன் 15லிருந்து தொடங்க உள்ளது.

பிரதமர் ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஆண்டு திட்ட ஆவணம் தயாரிக்குமாறு வலியுறுத்தல்

  • பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு அமைச்சகத்தின் மேல் அதிகாரிகளிடம் நன்கு திட்டமிடப்பட்ட இலக்குகளுடன் கொண்ட ஐந்தாண்டு திட்ட ஆவணம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இத்திட்டத்திற்கு அனுமதி 100 நாட்களுக்குள்  வழங்கப்படும். ஒவ்வொரு துறையிலும் விளைவுகளையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த செயலாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சூறாவளி வாயு மிகவும் கடுமையான சூறாவளி புயலாக  தீவிரமடைகிறது

  • கிழக்கு-மத்திய அரேபிய கடலில் வாயு சூறாவளி கடுமையான சூறாவளி புயலாக  தீவிரமடைந்துள்ளது. தற்போது கோவாவின் மேற்கு-வடமேற்கு பகுதியில் 420 கிமீ தொலைவில், மும்பையின் தெற்கே தென்மேற்கு பகுதிகளில் 320 கிமீ தொலைவில் மற்றும் குஜராத்தின் வேராவால் பகுதியில் 420 கிமீ தொலைவில் உள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) உள்ளூர் நிர்வாகத்திகுடன் இணைந்து குஜராத்தில் 35 குழுக்களும்,டீயுவில் நான்கு குழுக்களையும் நிறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படை, இராணுவம், கடலோர காவல்படை மற்றும் பி.எஸ்.எப் ஆகியவற்றின் மீட்புக் குழுக்களும்  நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சி திட்டம்

  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (NIRDPR), நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இசைவாக்கம் குறித்த பயிற்சி (SLACC) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற ஏழை விவசாயிகள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள மற்றும் தங்களது வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள இந்தத்திட்டம் உதவும்.

மேலும் ஆறு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு

  • ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வகையில் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஜூலை 3, 2019 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
  • தற்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சியின் காலம் 2019 ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கலாம் என மாநில ஆளுநர் பரிந்துரைத்திருந்தார்.

மணிப்பூரைச் சேர்ந்த நபர் வாட்ஸ் அப்பில் பக்கை கண்டறிந்து, பேஸ்புக் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்தார்

  • வாட்ஸ் அப்பில் பயனர் தனியுரிமையை மீறுகிற பக்கை கண்டறிந்த மணிப்பூரைச் சேர்ந்த நபரை பேஸ்புக் கௌரவித்துள்ளது.
  • மணிப்பூரைச் சேர்ந்த 22 வயதான சிவில் பொறியியலாளர் ஜோனெல் சூகைஜம், வாட்ஸ் அப்பில் பக்கை கண்டறிந்ததற்காக மாபெரும் சமூக ஊடகம் தனக்கு 5000 டாலர் வழங்கியதாகவும், மேலும் அவரை பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019 பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான ‘பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம்’ 94 பேர் பட்டியலில் தற்போது திரு. சூகைஜம் பெயர் 16வது இடத்தில் உள்ளது.

பசுமை மிசோரம் தினம்

  • மிசோரமில், பசுமை மிசோரம் தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது .இந்த தினம் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் போன்ற நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டது. இதன் நோக்கம் பசுமை சூழல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதாகும்.பசுமை மிசோரம் தினத்தை கடந்த 20 ஆண்டுகளாக மிசோரம் மாநிலம் கொண்டாடி வருகிறது.

டெல்லியில் பல மாநில பூகம்ப மாதிரிப் பயிற்சியை நடத்த என்.டி.எம்.. ஏற்பாடு

  • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) மாநில அரசுகளுடன் இணைந்து ஜூன் 28, 2019 அன்று பூகம்பத்தின் போது தயார்படுத்திக்கொள்ளுதல் குறித்து மாதிரிப் பயிற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் உள்ளூர் நிர்வாகத்தின் தயார்நிலை மற்றும் பதில் வழிமுறைகளை மேம்படுத்துவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது டெல்லி (அனைத்து 11 மாவட்டங்களும்), ஹரியானா (4 மாவட்டங்கள் – ஜஜார், ஃபரிதாபாத், குருகிராம் மற்றும் சோனிபட்) மற்றும் உத்தரப்பிரதேசம் (3 மாவட்டங்கள் – கவுதம் புத்நகர், காசியாபாத் மற்றும் மீரட்) ஆகிய இடங்களை உள்ளடக்கியுள்ளது .

 பொன்விழா காணும் வாப்கோஸ்

  • இந்திய அரசாங்கத்தால் 1969 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனமாக இணைக்கப்பட்ட வாப்கோஸ் தனது பொன்விழாவை புது தில்லியின் சிரி கோட்டையில் கொண்டாடியது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், அந்நிறுவனம் பொன்விழா கொண்டாட்டங்களை ““Transcending Boundaries- Touching Lives”.” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது.

ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டை நோக்கி இந்திய அரசு நகர்கிறது

  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய அரசாங்கம் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக கூறினார். ரேஷன் கார்டுகளின் தேசிய பெயர்வுத்திறன் அனைத்து பயனாளிகளுக்கும் குறிப்பாக புலம்பெயர்ந்தோருக்கு நாடு முழுவதும் பொது விநியோக முறைமை (பி.டி.எஸ்) கிடைப்பதை உறுதி செய்யும் என்றார்.

சிங்கே கபாப்ஸ் சிந்து பண்டிகைகள்

  • ஜம்மு-காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில், சிங்கே கபாப்ஸ் சிந்து பண்டிகைகள் லேவில் உள்ள சிந்து நதிக்கரையில் கொண்டாடப்படுகின்றன. திருவிழாவை ஆளுநர் சத்ய பால் மாலிக் திறந்து வைத்தார். திருவிழாவின் முக்கிய உள்ளூர் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள், கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள் மற்றும் இன உணவுப் பொருட்கள் இடம் பெறுகின்றது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரமான கல்வி குறித்த 5 ஆண்டு பார்வை திட்டத்தை வெளியிடுகிறது

  •  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை கல்வித் தரம் மேம்பாடு மற்றும் சேர்த்தல் திட்டம் (EQUIP) என்ற ஐந்தாண்டு பார்வைத் திட்டத்தை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.
  • உத்தியோகப்பூர்வ வெளியீட்டின் படி, சிறப்பம்சங்களை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மேற்கொண்ட விரிவான பயிற்சிக்குப் பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுடன் இணைந்து பஞ்சாப் நீர் மேலாண்மை திட்டம்

  • பஞ்சாப் அமைச்சர் சுக்பிந்தர் சிங் சர்க்காரி மாநிலத்திற்கு ஒரு விரிவான நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்காக இஸ்ரேல் நிபுணர்கள் குழுவை சண்டிகரில் சந்தித்தார். முன்னதாக, இஸ்ரேலிய குழு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தற்போதைய நிலைமை மற்றும் மாநிலத்தில் நீர் துறையில் உள்ள சவால்களை மதிப்பீடு செய்தது.
  • அக்டோபர் 2018ல் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பின்னர் இஸ்ரேலின் தேசிய நீர் நிறுவனமான மெகொரோட் மற்றும் பஞ்சாப் அரசு 2019 ஏப்ரல் மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Download PDF

Click Here to Read English

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!