தேசிய செய்திகள் – ஜூலை 2019

0

தேசிய செய்திகள் – ஜூலை 2019

இங்கு ஜூலை மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2019

 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF –  ஜூலை 2019

நாகாலாந்து தனது NRC யின் மாறுபாட்டை ஜூலை 10 முதல் தொடங்க உள்ளது

  • அண்டை மாநிலமான அசாம் புதுப்பித்து வரும் தேசிய குடிமக்களின் பதிவேட்டின் (என்.ஆர்.சி) மாறுபாட்டைத் தொடங்க நாகாலாந்து முடிவு செய்துள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான 60 நாள் காலக்கெடுவை வழங்கி உள்ளது.

வேளாண் சீர்திருத்தங்களுக்கான முதலமைச்சர்களின் குழுவை மத்திய அரசு அமைத்தது

  • இந்திய வேளாண்மையை மாற்றுவதற்காக பல மாநிலங்களின் முதலமைச்சர்களின் உயர் அதிகாரக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமை தாங்க உள்ளார், கர்நாடகா, ஹரியானா, அருணாச்சல பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச முதல்வர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

2021 க்குள் 7,000 க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்  நிறுவப்படவுள்ளது

  • ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், 21 மார்ச் 2021 க்குள் 7,000 க்கும் மேற்பட்ட பிரதான பயணிகளின் ரயில்களில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவ ரயில்வே துறை இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும் பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் ஏற்கனவே சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன வேண்டும் கூறினார்.

ஆர்ஆர்பி ஆட்சேர்ப்பு தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளன

  • பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஆர்ஆர்பிக்களின் ஆட்சேர்ப்பு தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமின்றி கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.பி களில் ஸ்கேல் -1 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தை உணரவைக்ககாந்திபீடியா

  • காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய கவுன்சில் காந்திபீடியா உருவாக்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2019-2020 பட்ஜெட்டில் தனது உரையில் தெரிவித்தார். காந்தியின் 150 வது பிறந்த நாளை அரசாங்கம் ஆண்டு முழுவதும் பல திட்டங்களுடன் குறிக்கும் நிலையில், அவரது நன்மதிப்புகளை பரப்புவதற்கான முயற்சிகளில் “காந்திபீடியா” பயன்தரும் என்று அரசு தெரிவித்தது.

குஜராத்தில் விமானத் தொழில் திறன் மேம்பாட்டுக்காக சிறந்த மையங்கள்  உருவாக்கம்.

  • குஜராத் அரசு விமானத் துறையில் திறன் மேம்பாட்டுக்காக சிறந்த மையங்களை உருவாக்க உள்ளதாக அகமதாபாத்தில் நடைபெற்ற விமானத் துறையின் வணிக வாய்ப்புகள் குறித்த 2 வது குஜராத் ஏவியேஷன் கான்க்ளேவ் மாநாட்டில் குஜராத் அரசின் சிவில் ஏவியேஷன் இயக்குநர் கேப்டன் அஜய் சவுகான் தெரிவித்து உள்ளார்.

2022 க்குள் இஎஸ்ஐ சட்டத்தை நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  • 2022 க்குள் இ.எஸ்.ஐ சட்டத்தை நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 722 மாவட்டங்களில், இ.எஸ்.ஐ திட்டம் சுமார் 541 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார்.
  • மேலும் அவர் கூறுகையில் ESIC 2.0 திட்டத்தின் கீழ், புதிதாக செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் ESI திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும். இந்நடவடிக்கையால் நாடு முழுவதும் சுமார் 3 கோடி 60 லட்சம் ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

2030 ஆண்டளவில் 50 லட்சம் கோடி ரூபாயை ரயில்வேயில் முதலீடு செய்ய அரசு திட்டம்

  • ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், 2030 ஆம் ஆண்டளவில் ரயில்வேயில் 50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பையிலிருந்து கோவா வழியாக மங்களூரு செல்லும் முழு கொங்கன் ரயில் பாதையும் 11,000 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கப்படும் என்று திரு கோயல் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் உர மானியம் ரூபாய் 10,000 கோடி உயர்வு

  • மத்திய பட்ஜெட்டில் உரத்திற்கான மானிய ஒதுக்கீடு சுமார் 10,000 கோடி ரூபாய் உயர்வு கண்டுள்ளது. உரங்கள் மானியத்திற்கான அதிகரித்த இந்த ஒதுக்கீடு விவசாயிகளின் மானிய பரிமாற்றத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என இரசாயன மற்றும் உர அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்தார். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் கணக்கிற்கு நேரடி மானிய உதவி திட்டம் (டிபிடி) மூலம் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை CPWD அமைக்கவுள்ளது 

  • மத்திய பொதுப்பணித் துறை நாடு முழுவதும் 136 குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள் உள்ளிட்ட நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமைக்க உள்ளது .சிபிடபிள்யூடியின் 165 வது தொடக்க தினத்தை குறிக்கும் விழாவில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, 100 நாள் நிகழ்ச்சி நிரலின் கீழ் 100 காலனிகளில் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமைப்பதை சிபிடபிள்யூடி நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது என்றார் .

திறன் இந்தியா அமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு நாள்

  • திறன் இந்தியா அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு நாள் ஜூலை 15, 2019 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன .தேசிய திறன் மேம்பாட்டு மிஷன் என்றும் அழைக்கப்படும் திறன் இந்தியா மிஷன் 15 ஜூலை 2015 இல் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு கோடி இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஐ.எஃப்.எஃப்.ஐயின் ஐம்பதாம் நூற்றாண்டு பதிப்பு நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது .

  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஐம்பதாம் நூற்றாண்டு பதிப்பு,  நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவின் பனாஜியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பனாஜியில் நடந்த ஐ.எஃப்.எஃப்.ஐ 2019 இன் வழிகாட்டும்  கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை வழங்கினார் மேலும்  எஃப்.டி.ஐ.ஐ மற்றும் சத்யஜித் ரே இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் மாணவர்களும் வேறு சில திரைப்பட நிறுவனங்களின் மாணவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு  இதன் மூலம் அனுபவம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் புளூபிரிண்ட் அறிக்கை

  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகளுக்காக தேசிய டிஜிட்டல் ஹெல்த் புளூபிரிண்ட் (என்.டி.எச்.பி) அறிக்கையை வெளியிட்டார்.
  • NDHB இன் நோக்கம், யுனிவர்சல் ஹெல்த் கவரேஜை திறம்பட ஆதரகிக்கக்கூடி, மலிவான, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான முறையில் ஒரு தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகும்.

அசாமில் துப்ரி மற்றும் மேகாலயாவில் புல்பாரி இணைக்க பிரம்மபுத்ரா மீது பாலம் அமைக்கப்படவுள்ளது

  • அஸ்ஸாமில் வடக்குக் கரையில் துப்ரி மற்றும் மேகாலயாவின் தென் கரையில் உள்ள புல்பாரி இடையே பிரம்மபுத்ரா நதிக்கு மேலான அணுகுமுறைகள் உட்பட நான்கு வழிச் பாலம் அமைக்கும் பணிகள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் (ஜிகா) கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வேலைக்கான மதிப்பீடு ரூ. 4997.04 கோடி
வருமானவரி தினம் 2019 ஐ கொண்டாட உள்ளது வருமான வரித்துறை
  • மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) மற்றும் அனைத்து கள அலுவலகங்களும் 159 வது வருமான வரி தினத்தை ஜூலை 24, 2019 அன்று கொண்டாடுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போரின்போது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய 1860 ஜூலை 24 ஆம் தேதி தான் இந்தியாவில் முதன்முறையாக வருமான வரி சர் ஜேம்ஸ் வில்சன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால்தான் ஜூலை 24 வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது.

நீர் பாதுகாப்பை உறுதி செய்யும் முதல் மாநிலமாக மேகாலயா திகழ்கிறது

  • அமைச்சரவையில் வழங்கிய ஒப்புதலைத் தொடர்ந்து இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதிசெய்த மற்றும் சொந்த நீர் கொள்கையைக் கொண்ட முதல் மாநிலமாக மேகாலயா தேர்வாகியுள்ளது. இக்கொள்கையின் மூலம் நீர்வளங்களை பாதுக்காப்பது, உள்நாட்டு சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான குடிநீரை மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் வழங்குவதே முக்கிய நோக்கமாகும்.
தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான மையத்தை ஐ சி எம் ஆர் தொடங்கியது
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவ புள்ளிவிவரங்களுக்கான தேசிய நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்-நிம்ஸ்), மக்கள் தொகை கவுன்சிலுடன் இணைந்து தேசிய தரவு தர மன்றத்தை (என்.டி.கியூ.எஃப்) அறிமுகப்படுத்தியது.
சந்தேகத்துக்குரிய விண்கல்  பீகாரில் கண்டுபிடிப்பு

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் 10 கிலோகிராம் எடையுள்ள மற்றும் காந்த பண்புகளைக் கொண்ட ஒரு விண்கல் ஜூலை 24 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் அவ்விண்கல் பாட்னாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டது

கார்கில் போர்வீரர்களின் வெற்றி மற்றும் வீரதீரச்செயல்களுக்கான நினைவுச்சின்னங்கள்’ கண்காட்சி

  • புது தில்லியில் கார்கில் விஜய் திவாஸின் 20 வது ஆண்டுவிழாவில் மத்திய கலாச்சார அமைச்சர் (ஐ.சி) ஸ்ரீ பிரஹ்லாத் சிங் படேல்’ கார்கில் போர்வீரர்களின் வெற்றி மற்றும் வீரதீரச்செயல்களுக்கான நினைவுச்சின்னங்கள்’ கண்காட்சியைத் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சியை கலாச்சாரம் மற்றும் தேசிய நினைவுச்சின்ன ஆணையம் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் சிங்கத்திற்கான சிறப்பு ஆம்புலன்ஸ்

  • நாட்டின் முதல் மயக்க மருந்து-மற்றும்-வென்டிலேட்டர், மல்டி-பாரா இயந்திரம், ஒரு இரத்த பகுப்பாய்வி மற்றும் அல்ட்ராசவுண்ட் இமேஜிங் தொகுப்பு பொருத்தப்பட்டிருக்கும், சிங்கத்திற்கான சிறப்பு ஆம்புலன்ஸ் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இவ்வாம்புலன்ஸ் உதவியினால் கிர் சரணாலயத்தில் ஒரு சிங்க குட்டி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் நான்காவது சுழற்சி – 2018

  • இந்த புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை ஆராய்தல், கால் தடத்தை வைத்து புலிகளின் இருப்பிடத்தை அறிவது, கழிவுகளைச் சேகரித்து அவற்றின் இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுதல் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பு முயற்சியாக நம்பப்படுகிறது. இந்தியாவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதற்கு முன் புலிகள் கணக்கெடுப்பு ஏற்கனவே 2006, 2010 மற்றும் 2014ல் எடுக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் சரணாலயம் மற்றும்  கேரளாவின் பெரியார் சரணாலயம் சிறந்த புலி இருப்புகளாக மதிப்பிடப்பட்டுள்ளது

  • 4வது தேசிய புலி மதிப்பீடு (புலி கணக்கெடுப்பு) உடன் வெளியிடப்பட்ட இந்தியாவின் 50 புலி சரணாலயங்களின் மதிப்பீட்டின்படி, மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் சரணாலயம் மற்றும் கேரளாவின் பெரியார் சரணாலயம் ஆகியவை நாட்டின் சிறந்து நிர்வகிக்கப்படும் புலி இருப்புகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133வது பிறந்த தினத்தை கூகுள் டூடுல் கௌரவித்தது

  • அறுவை சிகிச்சை நிபுணர், கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் 133வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருடைய ஓவியத்தை டூடுலில் போட்டு கௌரவித்தது. அவர் 1912 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராகவும், மெட்ராஸ் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியவர் ஆவார்.

Download PDF

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel – Click Here
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!