பிப்ரவரி 25ஆம் தேதி “தேசிய பசு அறிவியல் தேர்வு” – மத்திய அரசு அறிவிப்பு!!

2
பிப்ரவரி 25ஆம் தேதி
பிப்ரவரி 25ஆம் தேதி "தேசிய பசு அறிவியல் தேர்வு" - மத்திய அரசு அறிவிப்பு!!
பிப்ரவரி 25ஆம் தேதி “தேசிய பசு அறிவியல் தேர்வு” – மத்திய அரசு அறிவிப்பு!!

மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ‘பசு அறிவியல்’ தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அதில் பசுக்கள் மீது ஆர்வம் கொண்ட பொதுமக்களும் தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘பசு அறிவியல்’ தேர்வு:

தேசிய பசு ஆணையம் (ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்) மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் அழிந்து வரும் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் 2019-ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக பசுக்களை பாதுகாப்பதற்கு இந்த ஆணையம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு எதிரொலி – 52 ஆசிரியர்கள் & 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!

தற்போது நாட்டு மாடுகளின் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஆண்டு முதன்முதலாக ‘பசு அறிவியல்’ தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், இந்த தேர்வுக்கு எந்த கட்டணமும் இல்லை, இந்த தேர்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது. இந்த தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் ஒருவருக்கு சிறப்பு பரிசு மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இது குறித்து தேசிய பசு ஆணையம் தலைவர் வல்லபாய் கத்தரியா கூறுகையில், “இளைஞர்களிடம் நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வினை ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த தேர்வுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்று கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here