மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தயாராகும் தேசிய தலைநகர்? தீவிரமடையும் கொரோனா பரவல்!

0
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தயாராகும் தேசிய தலைநகர்? தீவிரமடையும் கொரோனா பரவல்!
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தயாராகும் தேசிய தலைநகர்? தீவிரமடையும் கொரோனா பரவல்!
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தயாராகும் தேசிய தலைநகர்? தீவிரமடையும் கொரோனா பரவல்!

கடந்த சில வாரங்களாக கொரோனா புதிய பாதிப்புகள் உச்சம் தொட்டு வரும் நிலையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக ஒமிக்ரான் பரவல் தொற்று ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில், சீனாவின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவின் தொழில்நுட்ப நகரமான ஷாங்காய் கடந்த ஒரு மாத கால ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஷாங்காய் போலல்லாமல், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெய்ஜிங் குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் எதுவும் கிடைக்காது!

ஆயினும்கூட, பெய்ஜிங்கின் சாயாங் மாவட்டம் உள்ளிட்ட பிற இடங்கள் ஊரடங்கு சாத்தியத்திற்காக தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக கொரோனா அதிகரிப்பை கருத்தில் கொண்டு பெய்ஜிங்கில் உள்ள 60 சுரங்கப்பாதை நிலையங்களை நகர அதிகாரிகள் மூடிவிட்டனர். மேலும், அதன் சேவை எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறவில்லை. இப்போது ஊடக அறிக்கைகளின்படி, 21 மில்லியன் மக்கள் வசிக்கும் பெய்ஜிங் நகரம் கொரோனா பரவுவதற்கு அதிக எச்சரிக்கையுடன் உள்ளது. அதனால் உணவகங்கள் மற்றும் பார்களில் வெளியே எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு, பள்ளிகள் காலவரையின்றி வகுப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தவிர, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நகரத்திலேயே தங்கும்படி கூறப்பட்டுள்ளனர். அதே போல அனைத்து குடியிருப்பாளர்களும் வாரம் முழுவதும் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் பெய்ஜிங்கிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு விதிக்கப்படாத போதிலும் பெய்ஜிங் நகர மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here