தமிழகத்தின் 6 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது – முழு விபரம்!

0
தமிழகத்தின் 6 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது - முழு விபரம்!
தமிழகத்தின் 6 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது - முழு விபரம்!
தமிழகத்தின் 6 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது – முழு விபரம்!

என்சிஇஆர்டி சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஐசிடி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெற தமிழகத்தை சேர்ந்த 6 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிடி விருது:

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. என்சிஇஆர்டி சார்பில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம்!

வழக்கமாக இந்த விருது பெற தமிழக பிரதிநிதித்துவத்தின் படி, மாநில அளவில் 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசு அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கும். இந்நிலையில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர். இதில் 2018 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 6 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

விருது பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள்:

2018 ஆம் ஆண்டு
  • கணேஷ் (கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம்)
  • மனோகர் சுப்பிரமணியம் ( வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கரூர் மாவட்டம்)
  • தயானந்த் (உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம்)
2019 ஆம் ஆண்டு
  • செந்தில் செல்வன் ( மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம்)
  • தங்கராஜா மகாதேவன் (பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம்)
  • இளவரசன் (வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம்)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here