ஜூன் 2018 -தேசிய செய்திகள்

0

ஜூன் 2018 -தேசிய செய்திகள்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் தேசிய செய்திகள் விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன்  தேசிய செய்திகள் PDF பதிவிறக்கம் செய்ய

தேசிய செய்திகள் – ஜூன் 2018:

காந்தி 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடும் செயற்குழு

  • மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஒரு நிறைவேற்றுக் குழுவை (ஈ.சி) தேசிய மற்றும் சர்வதேச அளவில் மக்களிடையே “மகாத்மா காந்தியின் கொள்கைகளை”பரப்புவதற்காக அமைத்துள்ளது.

திரிபுராவின் மாநில பழமானது அன்னாசி

  • திரிபுரா மாநிலத்தில் அதிகம் விளையக்கூடிய ராணி ரக அன்னாசிப் பழத்தை மாநில அரசின் அதிகாரப்பூர்வ பழமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் அறிவித்தார்.

சத்தீஸ்கர்: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம்

  • நயா ராய்பூரில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; நவீனமயமாக்கப்பட்ட, பிலாய் எஃகு ஆலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

உலகின் உயரமான கிர்டர் ரயில் பாலத்திற்கு SAIL எஃகு வழங்கியது

  • மணிப்பூரில், 111 கிமீ நீளமுள்ள ஜிராபம்-துப்புல்-இம்பால் புதிய பரந்த பாதை ரயில் திட்டத்திற்காக, ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) 60,000 டன் எஃகு பொருள்களை வழங்கியுள்ளது.

ஷில்லாங் 100 வது ஸ்மார்ட் நகரம்

  • நான்காவது ஆண்டு ஸ்மார்ட் சிட்டி பணி நிறைவு பெற்ற நிலையில், மத்திய அரசு இறுதியாக 100 வது மற்றும் கடைசி ஸ்மார்ட் நகரமாக ஷில்லாங்கை அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பு பணி இறுதி முடிவு தேதி ஜூன் 2023 என அமைக்கிறது, ஒவ்வொரு நகரமும் அதன் திட்டங்களை முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.

ஜலந்தரில் 106 வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம் (LPU) இந்திய அறிவியல் மாநாடு உலகின் மிகப்பெரிய விஞ்ஞான நிகழ்வு என கூறியுள்ளது.

4 வது சர்வதேச யோகா தினம்

  • 4வது சர்வதேச யோகா தினம் உத்தரகண்ட் டெஹ்ராடூன், வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. பிரதம மந்திரி 50,000 யோகா ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் யோகா செய்தார்.

ஆக்ஸிடோசின் தடை

  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆக்ஸிடோசின் தயாரிக்கப்படுவதை தடை செய்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் ஜூன் 29ம் தேதி வருகை தருகிறார்.
  • அங்கு மூப்பியல் தேசிய மையத்துக்கான அடிக்கல்லை அவர் நாட்டுகிறார். இது வயது முதிர்ந்தோருக்கு நேரும் அனைத்துவிதமான உடல்உபாதைகளுக்கும் தீர்வு வழங்கக் கூடிய பல் நோக்கு சிறப்பு மருத்துவ மையமாக திகழும்.

PDF பதிவிறக்கம் செய்ய

For English –  June Important National Affairs PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!