தேசிய செய்திகள் – ஜூலை 2018

0

தேசிய செய்திகள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

 PDF பதிவிறக்கம் செய்ய

தேசிய செய்திகள் – ஜூலை 2018:

பெஹ்டியன்க்லாம் விழா

  • வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரபலமான நான்கு நாள் “பெஹ்டியன்க்லாம்” மேகாலயா கலாச்சார விழாவில் கலந்து கொண்டார், ஒவ்வொரு வருடமும் மேகாலாயவிலுள்ள ஜோவாய் புறநகரில் இந்த விழா நடைபெறும்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயர்மாற்றம்

  • திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவர் ஆகிறார் திரு. வெங்கையா நாயுடு

  • 76 ஆண்டு காலத்தில் முதன்முறையாக மாநிலங்களவை தலைவர் திரு வெங்கைய நாயுடு அயல்நாட்டு அவையோடு, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல வகை செய்ய ருவாண்டா குடியரசின் பிரதிநிதிகள் சபை தலைவர் திரு. பர்னார்ட் மக்குஸாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பீகார் அரசு 2016 ஆம் ஆண்டு தடை மற்றும் மசோதா சட்டத்தின் கடுமையான விதிகளில் திருத்தங்களை அனுமதிக்கிறது

  • முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், மதுபானங்கள் அருந்தினால் வீடு, நிலம் மற்றும் வாகனம் உட்பட சொத்துக்களை பறிமுதல் செய்யும் கடுமையான விதிகளை ரத்து செய்ய ஒப்புதல் அளித்தது.

ராஜ்யசபாவில் ஏழு புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்

  • ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் சித்தாந்தர் ராகேஷ் சின்ஹா, பாரம்பரிய நடனகாரர் சோனால் மான்சிங் மற்றும் சிற்பக்கலை ரகுநாத் மஹபத்ரா ஆகியோர் ராஜ்ய சபாவில் பதவி ஏற்றனர்.

அனைத்து குழந்தை திருமணங்களும் செல்லாதபடி செய்ய அமைச்சரவையை நாட உள்ளது WCD அமைச்சகம்

  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (WCD) அமைச்சகம், அனைத்து குழந்தை திருமணங்களும் செல்லாதபடி செய்ய அமைச்சரவையை நாட உள்ளது. 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2.3 கோடி குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

குழந்தை காவலில் உள்ள சச்சரவுகளை தீர்ப்பதற்கான புதிய செல்

  • நாடு தழுவிய திருமண சச்சரவுகளின் வழக்குகளிலிருந்து எழும் குழந்தை காவலில் உள்ள விவாதங்களைத் தீர்ப்பதற்கு குழந்தைகள் உரிமை உச்சஅமைப்பு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய கமிஷனின் (NCPCR) கீழ் ஒரு மத்தியஸ்தம் செல் அமைக்கப்படும்.

காற்று தரம் மற்றும் வானிலை அடிப்படையிலான மிகவும் மேம்பட்ட அமைப்பு (SAFAR)

  • டாக்டர் ஹர்ஷவர்தன் தில்லி சாந்தினி சௌக்கில் மிகவும் மேம்பட்ட காற்று தரம் மற்றும் வானிலை கணிப்பு அமைப்பைத் (SAFAR) தொடங்கி வைத்தார்.

கிழக்கு இந்தியாவில் 40% பற்றாக்குறை மழை பதிவு

  • பீகாரில் அதிகபட்சமாக 48 சதவிகிதம் பருவமழை பற்றாக்குறை பதிவு, கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் 46 சதவிகிதமும், 42 சதவிகிதமும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

For English – National Affairs – July 2018

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!