செப்.3ம் தேதி ஆன்லைன் மூலம் NATA நுழைவுத்தேர்வு – விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
செப்.3ம் தேதி ஆன்லைன் மூலம் NATA நுழைவுத்தேர்வு - விண்ணப்ப பதிவு தொடக்கம்!
செப்.3ம் தேதி ஆன்லைன் மூலம் NATA நுழைவுத்தேர்வு - விண்ணப்ப பதிவு தொடக்கம்!
செப்.3ம் தேதி ஆன்லைன் மூலம் NATA நுழைவுத்தேர்வு – விண்ணப்ப பதிவு தொடக்கம்!

இந்தியாவில் (பி.ஆர்க்) கட்டட அமைப்பியல் படிப்புகளுக்கான NATA நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஆன்லைன் மூலமாக நடைபெறும் என ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.

NATA நுழைவுத்தேர்வு:

இந்தியாவில் ஆர்கிடெக்சர் படிப்புகளில் சேர தேசிய அளவில் NATA என்னும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வு ஆன்லைன் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் ஜூலை 11ம் தேதியும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

JEE Advanced 2021 நுழைவுத்தேர்வு – அக்டோபர் 3ல் துவக்கம்!

அதனை தொடர்ந்து தற்போது பி.ஆர்க் படிப்புக்கான NATA நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஆன்லைன் மூலமாக நடைபெறும் என ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது மூன்றாம் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த கட்டமைப்பியல் தேர்வில் இரண்டு முறை பங்கேற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே ஒரு முறை மட்டும் பதிவு செய்து தேர்வு எழுதியவர்கள் தற்போது நடைபெற உள்ள நட்டா தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் துவங்கியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் நுழைவு தேர்வுக்கு www.nata.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஆர்கிடெக்சர் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here