சன் டிவி நந்தினி சீரியல் புகழ் கீர்த்திக்கு ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்றான நந்தினி சீரியலில், மாயா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கீர்த்தி. இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி:
சன் டிவியில் இயக்குனர் சுந்தர் சி எழுதி நடிகை குஷ்புவின் அவ்னி ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான சீரியல் நந்தினி. திகில் தொடரான இது பல எபிசோடுகளை தாண்டி ஓடியது. பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ராகுல் ரவி நடித்திருந்தார். வருடன் நித்யா ராம், மாளவிகா இருவரும் இந்த தொடரின் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.
சந்தியா மீது சரவணன் காட்டும் அக்கறை, உண்மையை தெரிந்து கொண்ட சந்தியா – “ராஜா ராணி 2” ப்ரோமோ!
அதோடு விஜயகுமார், காயத்ரி, விஜயலக்ஷ்மி என்று பல நட்சத்திரங்கள் நந்தினி சீரியலில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் அந்த தொடரில் முக்கியமான மாயா வேடத்தில் நடிகை நந்தினி நடித்திருந்தார். அதன் மூலம் பிரபலமான அவர் அதன் பின்னர் கல்யாண பரிசு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் ஜெய் தனுஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அவர் அதனை தனது இன்ஸ்டா மூலமாக ரசிகர்களிடம் தெரியப்படுத்தினார். அதன் பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியும் அவருக்கு நடத்தப்பட்டது. தற்போது இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜெய் தனுஷ் மற்றும் கீர்த்தி இருவரும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.