ரூ.2 லட்சம் ஊதியத்தில் NALCO நிறுவனத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.2 லட்சம் ஊதியத்தில் NALCO நிறுவனத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.2 லட்சம் ஊதியத்தில் NALCO நிறுவனத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.2 லட்சம் ஊதியத்தில் NALCO நிறுவனத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Medical Officer, Specialist ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Aluminium Company Limited (NALCO)
பணியின் பெயர் Medical Officer, Specialist
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் (NALCO) காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 06 இடமும், Specialist பணிக்கு என 11 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Medical Officer, Specialist கல்வித் தகுதி:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு MBBS Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DGFASLI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட PG Certificate பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD / MS / MBBS / BDS Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Medical Officer, Specialist முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Medical Officer, Specialist வயது வரம்பு:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 38 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள், SC பிரிவினருக்கு 05 ஆண்டுகள், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

NALCO சம்பளம்:

Medical Officer பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Specialist பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

NALCO தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
NALCO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 30.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

NALCO Notification Link

NALCO Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!