கலர்ஸ் தமிழ் “வள்ளி திருமணம்” சீரியல் குறித்து நக்ஷத்ரா சொன்ன விளக்கம் – நிஜ வாழ்க்கையில் இப்படியா?
ஜீ தமிழில் ஒளிபரப்பான “யாரடி நீ மோஹினி” சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த நடிகை நக்ஷத்ரா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “வள்ளி திருமணம்” சீரியலில் தைரியமான பெண்ணாக நடித்து இருப்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை நக்ஷத்ரா:
தமிழ் சின்னத்திரையில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி தங்களது கதைக்கு ஒன்றிய நடிப்பு திறமையால் மக்களிடம் பிரபலமாகி இருக்கின்றனர். தற்போது அந்த சீரியல் முடிந்த பின்னர் கூட அவர்களை கதாபாத்திரம் சொல்லி தான் அடையாளம் காணப்படும் அளவிற்கு கதையுடன் ஒன்றி நடித்துள்ளனர். இந்நிலையில் ஜீ தமிழில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான வெற்றி சீரியல் தான் “யாரடி நீ மோஹினி”. இந்த சீரியலில் முத்தரசு மாமாவை விரட்டி விரட்டி காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தவர் நக்ஷத்ரா.
அவருடைய சொந்த ஊர் கேரளா மாநிலம் கொல்லம் ஆகும். ஆனால் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். யாரடி நீ மோஹினி சீரியல் முடிவடைந்த நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “வள்ளி திருமணம்” சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியானது அதில் அப்பாவி வெண்ணிலாவாக நடித்த நக்ஷத்ரா, தற்போது வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடி செய்யும் பெண்ணாக நடிக்க இருக்கிறார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக் பாஸ்’ ராஜு – ப்ரோமோ ரிலீஸ்!
இது குறித்து அவர் கூறுகையில், நான் நிஜ வாழ்க்கையில் வள்ளி கதாபாத்திரம் போல தைரியமான பெண்ணாக தான் இருப்பேன், வெண்ணிலா என்ற அப்பாவி மற்றும் ஆன்மீகப் பெண்ணாக நான் நடித்திருப்பதைப் பார்த்து, என் நண்பர்கள் அனைவரும் என் நிஜத்தில் நடந்து கொள்வதை கூறி கேலி செய்வார்கள். நான் ஜீன்ஸ் அணிந்திருந்தாலும், எல்லோரும் என்னை வெண்ணிலாவாக பார்கிறார்கள். ஆனால் என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், நிஜ வாழ்க்கையில் நான் வள்ளி போன்ற ஒரு பெண் என அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.