சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு உண்மை காரணம் – வைரலாகும் செய்தி! நாகார்ஜுனா விளக்கம்!

0
சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு உண்மை காரணம் - வைரலாகும் செய்தி! நாகார்ஜுனா விளக்கம்!
சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு உண்மை காரணம் - வைரலாகும் செய்தி! நாகார்ஜுனா விளக்கம்!
சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு உண்மை காரணம் – வைரலாகும் செய்தி! நாகார்ஜுனா விளக்கம்!

சமீபகாலமாக சினிமா துறையினர் விவாகரத்து செய்தி , சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த வகையில் சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்து நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நாகார்ஜுனா விளக்கம்:

சினிமா துறையில் நடிகர் – நடிகைகள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். இந்த திருமணம் விரைவில் விவகாரத்தில் முடிவதும் வழக்கம்தான். இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து கொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இவர்களை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றன. தமிழ் – தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

‘பாரதி கண்ணம்மா’ வினுஷா கடந்து வந்த பாதை – அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

இவர்கள் 4 ஆண்டுகள் ஒன்றாக சேர்த்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல பிரிகிறோம்’ என தனித்தனியாக அவர்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை எதற்காக பிரித்தனர் என்பதன் காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறிவந்தனர்.

விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கத்தி – ரசிகர்கள் உற்சாகம் !

மேலும் நடிகர் நாகார்ஜுனா ‘சமந்தா தான் முதலில் விவாகரத்து கோரினார். அதை நாகசைதன்யா ஒத்துக்கொண்டார்” என்று நாகார்ஜுனா கூறியதாக தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்தது. தற்போது இந்த தகவல் தொடர்பாக நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் “சமந்தா மற்றும் நாக சைதன்யா பற்றிய எனது அறிக்கையை குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது மற்றும் முற்றிலும் முட்டாள்தனம் தவறான வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்” என நாகார்ஜுனா கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here