கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து நடிப்பில் 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து நடிப்பில் 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அதில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த வகையில் நடிகர் சித்து நடிப்பில் “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

நம்ம வீட்டு மாப்பிள்ளை:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் குடும்ப வாழ்க்கை பற்றியும் பெண்களின் முன்னேற்றங்களை பற்றியும் கதையாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அனைத்து சீரியல்களுக்கும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. முன்னதாக பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, தற்போது அனைத்து தரப்பினரையும் சீரியல் பார்க்க வைத்துள்ளனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் தனம் – ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் புதிய கதைக்களத்துடன் கூடிய சீரியல்களை விஜய் டிவி அறிமுகம் செய்து வருகிறது. அதில் மக்களிடம் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் ஹீரோ ஹீரோயினாக நடிப்பதால் ஏகப்பட்ட பேர் விரும்பி இந்த சீரியல்களை பார்க்கின்றனர். இந்நிலையில் தற்போது புதிய சீரியல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரியலுக்கு “நம்ம வீட்டு மாப்பிள்ளை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் “ராஜா ராணி 2” சீரியலில் நடித்து வரும் சித்து ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிமுகமாகும் புதிய அஞ்சலி – ப்ரோமோ ரிலீஸ்!

ஹீரோயினாக ஏற்கனவே பாரதி கண்ணம்மாவில் நடித்து, தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கும் ரோஷினி நடிக்க இருக்கிறார். ராஜா ராணி சீரியலில் சித்து சரவணனாக பயந்த சுபாவம் கொண்டவராக நடித்து வந்தார். ஆனால் இந்த ப்ரோமோவில் ஆக்சன் காட்சிகள் அமைந்துள்ளது. அதனால் சித்துவை மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்க்க இருப்பதால் இந்த சீரியல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!