மாயனுடன் மீண்டும் வீட்டிற்கு வரும் மகா – இன்றைய ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ எபிசோட்!

0
மாயனுடன் மீண்டும் வீட்டிற்கு வரும் மகா - இன்றைய 'நாம் இருவர், நமக்கு இருவர்' எபிசோட்!
மாயனுடன் மீண்டும் வீட்டிற்கு வரும் மகா - இன்றைய 'நாம் இருவர், நமக்கு இருவர்' எபிசோட்!
மாயனுடன் மீண்டும் வீட்டிற்கு வரும் மகா – இன்றைய ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ எபிசோட்!

இன்று “நாம் இருவர், நமக்கு இருவர்” தொடரில் மாயன் மற்றும் மகா இருவரும் 6 மாதங்கள் ஒன்றாக இருந்தால் தான் டிவோர்ஸ் கிடைக்கும் என்று வக்கீல் கூறி விடுகிறார். இதனால் மாயன் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர்.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்

இன்று மாயன் நாச்சியாரிடம் கூற வேண்டும் என்று நினைத்ததை பின்னர் கூறுவதாக கூறி விட்டு சென்று விடுகிறார். இதனால் நாச்சியாருக்கு நெருடலாக இருக்கிறது. பின், அவரும் மாயனை வற்புறுத்தி கேட்கவில்லை. மாயன் மற்றும் மகா இருவரும் டிவோர்ஸ் வாங்க வேண்டும் என்று வக்கீலை பார்க்க செல்கின்றனர். அப்போது இருவரும் சம்மதித்து தான் டிவோர்ஸ் அப்ளை செய்து இருக்கிறீர்களா? என்று வக்கீல் கேட்கிறார். அதற்கு மாயன் இல்லை என்றும், மகா ஆமாம் என்றும் கூறுகிறார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்!

இதனை பார்த்து விட்டு வக்கீல் இருவரும் நன்றாக சேர்ந்து வாழும்படி அறிவுறுத்துகிறார். இதனை மொத்தமாக மகா மறுத்து விடுகிறார். தனது முடிவில் இருந்து தான் மாறப்போவதில்லை என்றும் கூறுகிறார். பின், குழந்தை பற்றி வக்கீல் கேட்கிறார். கர்ப்பமாகி 3 மாதங்கள் என்றும் மகா கூறியதும், அப்போது இருவரும் 3 மாதங்களுக்கு முன்பு வரை சந்தோசமாக இருந்த காரணத்தால் இருவரும் அடுத்த 6 மாதங்கள் சேர்ந்து இருந்தால் தான் டிவோர்ஸ் கிடைக்கும் என்று வக்கீல் கூறி விடுகிறார்.

இதனால் மாயன் மிகவும் சந்தோசம் அடைந்து விடுகிறார். மகா கோபம் அடைந்து அங்கேயே வக்கீல் முன்பு இருவரும் சண்டை போடுகின்றனர். இதனை பார்த்து விட்டு அவர் இருவரையும் சமாதானம் செய்கிறார். மஹாவும் இறுதியில் மாயன் வீட்டிற்கு செல்ல ஒப்புக் கொள்கிறார். இதனால் மஹாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து, இருவரையும் வழியனுப்பி வைக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

பின், மாயன் வீட்டினர் மஹாவை வரவேற்கின்றனர். ஆனால், மகா தான் 6 மாதங்கள் மட்டுமே இங்கே இருக்க போவதாகவும், பின் நிரந்தரமாக மாயனை விட்டு பிரிந்து போக இருப்பதாகவும் கூறி விடுகிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here