பரிவட்டம் கட்ட சண்டைபோட்டுக் கொள்ளும் மாறன் & மாயன் – ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ப்ரோமோ!

0
பரிவட்டம் கட்ட சண்டைபோட்டுக் கொள்ளும் மாறன் & மாயன் - 'நாம் இருவர் நமக்கு இருவர்' ப்ரோமோ!
பரிவட்டம் கட்ட சண்டைபோட்டுக் கொள்ளும் மாறன் & மாயன் - 'நாம் இருவர் நமக்கு இருவர்' ப்ரோமோ!
பரிவட்டம் கட்ட சண்டைபோட்டுக் கொள்ளும் மாறன் & மாயன் – ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருவது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் தான். தற்போது இந்த சீரியலில் மாறன் மற்றும் மாயன் இருவருக்கும் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. காயத்ரி, ஐஸ்வர்யா மற்றும் சரண்யா ஆகியோரை விட்டுவிட்டு வந்தால் மட்டும் தான் நான் உனக்கு தம்பி என்று மாறன் கூறுகிறார். இதனை கேட்டு கோபம் அடையும் மாயன், தன்னால் தனது குடும்பத்தினை விட்டு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறி விடுகிறார். இதனால் அண்ணன்-தம்பி இருவரும் எதிரிகளாக மாறி விடுகின்றனர்.

தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!

தொடர்ந்து இது போன்ற காட்சிகளாகவே இந்த சீரியலில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஒரு லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கோவில் திருவிழாவில் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் மாயனுக்கு வழக்கம் போலவே பரிவட்டம் கட்டுகின்றனர். ஆனால், அதனை எதிர்த்து மாறன் மற்றும் அவரது அம்மா சண்டைக்கு வருகின்றனர். அப்போது பரிவட்டம் யாருக்கு கட்ட வேண்டும் என்று கடவுளே முடிவு செய்யட்டும் என்று கோவில் பூசாரி கடவுளை பார்த்து கொண்டு மாலையை எறிகிறார்.

மனம் திருந்தி கண்ணம்மாவுடன் சேர விரும்பும் பாரதி – வெண்பா ஷாக்! வெளியான ப்ரோமோ!

அந்த மாலை மாறன் மீது வந்து விழுகிறது. இதனால் மாறன் மற்றும் அவரது அம்மா மகிழ்ச்சி அடைகின்றனர். பின்னர், நாச்சியாரை சந்தித்து பேசும் சாரதா எனக்கான உரிமையினை நான் இந்த இடத்தில் நிலை நாட்டுவோன் என்று கூறுகிறார். அதற்கு நாச்சியார் நாங்கள் உங்கள் வழிக்கு வரவே இல்லை என்று கூறி வருந்துகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!