உயிருடன் திரும்பி வந்த முத்தரசு, பதறிப்போன வடிவு – இன்றைய “நாம் இருவர், நமக்கு இருவர்” எபிசோட்!

0
உயிருடன் திரும்பி வந்த முத்தரசு, பதறிப்போன வடிவு - இன்றைய
உயிருடன் திரும்பி வந்த முத்தரசு, பதறிப்போன வடிவு - இன்றைய "நாம் இருவர், நமக்கு இருவர்" எபிசோட்!
உயிருடன் திரும்பி வந்த முத்தரசு, பதறிப்போன வடிவு – இன்றைய “நாம் இருவர், நமக்கு இருவர்” எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” தொடரில் இன்று வடிவு தனது மகன் முத்துராசு உயிர் பெற்று வந்து விட்டதாக கூறுகிறார். இதனால் அவரது கணவர் பயந்து விடுகிறார். மாயனை என்றுமே தான் மன்னித்து வாழ மாட்டேன் என்று மஹா மாயனிடம் கூறி விடுகிறார்.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மஹா வீட்டிற்கு வந்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், தான் இங்கு வந்தது நிரந்தரமாக மாயனை விட்டு பிரிவதற்காக தான் என்று கூறுகிறார். இதனால் நாச்சியார் சற்று வருத்தம் அடைந்தாலும், தனக்கு மஹாவின் காதல் மேல் நம்பிக்கை உள்ளது என்று மாயன் அவரை சமாதானம் செய்கிறார்.

அழகப்பா பல்கலை ஆன்லைன் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பின், இரவு உறங்கும் போது வடிவிற்கு ஒரு அழுகை குரல் கேட்கிறது. யார் அது என்று தெரிந்து கொள்ள வடிவு எழுந்து செல்கிறார். அங்கு தனது மகன் முத்துராசு ரத்த கரை உள்ள சட்டையினை அணிந்து இருப்பதனை பார்த்து பதறுகிறார். பின், முத்துராசை கொலை செய்தது யார் என்று கேட்கிறார். அதற்கு, அவர் தன்னை மிகவும் கொடூரமாக கொலை செய்து விட்டனர் என்று கூறி அழுகிறார். இதனை கேட்ட வடிவு மிகவும் பதறி அழுகிறார். பின், தனது கணவனை எழுப்பி முத்துராசு வீட்டில் இருப்பதனை பற்றி கூறுகிறார். இதனை கேட்டு அவரது கணவர் குழப்பம் அடைந்து விடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

வடிவு தனது மகன் இருக்கும் இடத்திற்கு சென்று காட்டுகிறார். அங்கு முத்துராசு இல்லாததும், குழப்பம் அடைந்து தனது கணவரை கட்டி கொண்டு அழுகிறார். தனது மனைவியின் நிலை நினைத்து அவர் மிகவும் பயந்து போய் விடுகிறார். இதற்கு ஒரு முடிவினை கட்ட வேண்டும் என்றும் நினைத்து கொள்கிறார். பின், மாயன் மஹாவிடம் அன்பாக நடந்து கொள்கிறார். இதனை பார்க்கும் மஹா தன்னிடம் இப்படி நடந்து கொள்வதால் தான் மனம் மாறி இங்கேயே வாழ்ந்து விடுவேன் என்று நினைக்க வேண்டாம் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!