ஐஸ்வர்யா & நாச்சியார் முத்துராசை கொலை செய்திருக்கலாம், சந்தேகப்படும் டிஜிபி – இன்றைய எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ” நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று டிஜிபி கார்த்தி, ஐஸ்வர்யா மற்றும் நாச்சியார் இருவரும் கொலையாளியாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைகிறார். அதற்கான காரணங்களையும் கூறுகிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
இன்று “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் டிஜிபி கார்த்தி அனைவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்கிறார். அதில் தனக்கு நாச்சியார், மாயன் மற்றும் ஐஸ்வர்யா மூவரின் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். முதலில், தனக்கு மாயன் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் மிரட்டுவதற்காக முத்துராசை பார்க்க சென்று இருக்கலாம் என்றும், ஆனால் திடிரென்று முடிவினை மாற்றி கொண்டு முத்துராசை கொலை செய்திருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் மாயனை விட குடும்பத்தில் பலருக்கும் முத்துராசு மீது அதிகளவில் பகை இருப்பதால் மாயனை மட்டுமே சந்தேகம் கொள்ள முடியாது என்று கூறுகிறார்.
சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
பின்னர், தனக்கு ஐஸ்வர்யா மற்றும் நாச்சியார் இருவர் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். காரணம், நாச்சியார் தனது மகளை தனது கண்முன்னே முத்துராசு துன்பப்படுத்தும் போது ஒரு தாயாக வருத்தப்பட்டு இருக்கலாம் என்றும், அதனால் கொலை செய்திருக்கலாம் என்று கூறுகிறார். இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். கடைசியாக, தனக்கு ஐஸ்வர்யா மீது தான் அதிகளவில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்.
TN Job “FB
Group” Join Now
ஆரம்பத்தில் இருந்து முத்துராசின் துன்புறுத்தலுக்கு அதிகளவில் ஆளானது ஐஸ்வர்யா தான். திருமணத்தில் இருந்து அனைத்து விஷயங்களிலும் முத்துராசு குடும்பத்தின் மற்றவர்களை விட ஐஸ்வர்யாவை தான் அதிகமாக மிரட்டி உள்ளார். அதனால் ஐஸ்வர்யா கொலை நடந்த அன்று கெஸ்ட் ஹவுஸ் சென்று முதலில் முத்துராசிடம் கெஞ்சி இருக்க வேண்டும். பின்னர், அவர் துப்பாக்கி வைத்து அவரை கொலை செய்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!