Degree முடித்தவர்களுக்கு ரூ.1,77,500/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

Degree முடித்தவர்களுக்கு ரூ.1,77,500/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Accounts Officer, Assistant Account Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (09.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை எளிமையாக இந்த பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

மருத்துவ சேவைகள் கழகத்தில் (TNMSC) Accounts Officer, Assistant Account Officer பணிகளுக்கு தலா ஒரு இடங்கள் வீதம் மொத்தமாக 02 இடங்கள் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் Commerce பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master’s Degree யை படித்தவராக இருக்க வேண்டும். Accounts Officer, Assistant Account Officer பணிகளுக்கு குறைந்த பட்சம் 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – பெற்றோர்கள் மகிழ்ச்சி!

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Accounts Officer பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாகவும், Assistant Accounts Officer பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.37,700/- முதல் ரூ.1,19,500/- வரை மாத ஊதியமாகவும் வழங்கப்படும். இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Accounts Officer, Assistant Account Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பின்பு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து The Managing Director,Tamil Nadu Medical Services Corporation Limited,No.417, Pantheon Road,Egmore, Chennai – 8. என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (09.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!