சின்னத்திரை பிரபலம் சித்ராவின் தற்கொலையில் மர்மம் – கணவர் ஹேம்நாத் காவல் நிலையத்தில் புகார்!

0
சின்னத்திரை பிரபலம் சித்ராவின் தற்கொலையில் மர்மம் - கணவர் ஹேம்நாத் காவல் நிலையத்தில் புகார்!
சின்னத்திரை பிரபலம் சித்ராவின் தற்கொலையில் மர்மம் - கணவர் ஹேம்நாத் காவல் நிலையத்தில் புகார்!
சின்னத்திரை பிரபலம் சித்ராவின் தற்கொலையில் மர்மம் – கணவர் ஹேம்நாத் காவல் நிலையத்தில் புகார்!

கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை பிரபலமான சித்ராவின் தற்கொலையில் மிகப்பெரிய உண்மை ஒளிந்து இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்களின் பெயரை வெளியே கூறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்த கும்பல் மிரட்டுவதாகவும் தற்போது புகார் அளித்துள்ளார்.

சித்ராவின் தற்கொலை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்து என்னும் சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் திரையுலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் கணவரான ஹேம்நாத் சித்ராவை கொடுமை செய்ததன் காரணமாக தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என பல செய்திகள் வெளியாகின. இதனால் போலீசார் ஹேம்நாத்தை கைது செய்ததை தொடர்ந்து ஹேம்நாத் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜாமினில் வெளிவந்தார்.

கடுப்பேத்திய கண்ணம்மா, பொருள்களை உடைத்து கதறி அழுத வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இந்நிலையில் ஹேம்நாத், சித்ராவின் மரணம் குறித்தான ஒரு செய்தியை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதாவது சித்ரா தற்கொலை செய்து கொண்ட போதே நானும் இவ்வுலகை விட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் உண்மைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் எனவும், என் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்கவே தற்போது வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

சித்ராவின் தற்கொலைக்குப் பின்னால் மிகப் பெரிய பண பலமும், அரசியல் பலமும் மிகுந்த மாஃபியா கும்பல் இருப்பதாகவும் இது அனைவருக்கும் தெரியும் எனவும் வெளியே கூறினால் மாஃபியா கும்பலால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என பயந்து அனைவரும் உண்மையை வெளியே கூறாமல் மறைப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பலின் பெயரை வெளியே கூறினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அந்த கும்பல் மிரட்டுவதாகவும், தற்போது நான் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன் என பாதுகாப்பு வேண்டி போலீஸ் நிலையத்திற்கு வந்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here