பொருட்களை விளம்பரப்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை – மீறினால் ரூ.10 முதல் 50 லட்சம் வரை அபராதம்!

0
பொருட்களை விளம்பரப்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை - மீறினால் ரூ.10 முதல் 50 லட்சம் வரை அபராதம்!
பொருட்களை விளம்பரப்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை - மீறினால் ரூ.10 முதல் 50 லட்சம் வரை அபராதம்!
பொருட்களை விளம்பரப்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை – மீறினால் ரூ.10 முதல் 50 லட்சம் வரை அபராதம்!

தற்போது பொருட்களை அதிகமாக விற்பனை செய்வதற்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாயிலாக பிரமோட் செய்யப்படுகிறது. தற்போது இவ்வாறு செய்யும் பிரபலங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நுகர்வோர் நலன்

தற்போது தங்கள் நிறுவனத்தின் பொருட்களை அதிகமாக விற்பனை செய்வதற்கு பிரபலங்கள், Influencers ஆகியோர் வாயிலாக சமூக ஊடகங்களில் பொருட்களை குறித்து ப்ரொமோட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போலியான விளம்பரங்களும் செய்யப்படுவதால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி இனி பிரபலங்கள் ப்ரொமோட் செய்வதற்கு அந்த நிறுவனத்தில் தாங்கள் பெறும் பங்குகள் மற்றும் இலவச பயணங்கள் மற்றும் பிற விதமான சலுகைகள் குறித்த விவரங்களையும் விளம்பர வீடியோ பதிவில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விடாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

EPFO பயனாளர்கள் இதை செய்யவில்லையெனில் Login செய்ய முடியாது – முழு விபரம் உள்ளே!!

இதனை மீறி செயல்படுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் செயலாளர் கூறியதாவது, நாட்டில் நுகர்வோர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ப்ரொமோட் செய்யும் வீடியோ பதிவுகள் லைவ் வீடியோவாக இருந்தாலும் இந்த விபரங்கள் வீடியோ முழுமைக்கும் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!