மீண்டும் வீட்டை விற்கும் முயற்சியில் மூர்த்தி, வாங்க முன்வரும் மீனா அப்பா – லேட்டஸ்ட் ப்ரோமோ!

0
மீண்டும் வீட்டை விற்கும் முயற்சியில் மூர்த்தி, வாங்க முன்வரும் மீனா அப்பா - லேட்டஸ்ட் ப்ரோமோ!
மீண்டும் வீட்டை விற்கும் முயற்சியில் மூர்த்தி, வாங்க முன்வரும் மீனா அப்பா - லேட்டஸ்ட் ப்ரோமோ!
மீண்டும் வீட்டை விற்கும் முயற்சியில் மூர்த்தி, வாங்க முன்வரும் மீனா அப்பா – லேட்டஸ்ட் ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வர இருக்கும் புதிய களத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் இயக்கப்படுவதால் இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில எபிசோடுகளில் ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லர் தொடங்குகிறார். இதற்கு முதலில் வீட்டில் இருப்பவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றாலும் பிறகு எல்லாரும் ஒரு வழியாக ஓகே சொல்லிட்டாங்க. இன்னொரு பக்கம் கண்ணன் பேங்க் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாரு. இப்படி சீரியல் மெதுவா நகர ஏதும் பெரிய ட்விஸ்ட் வராத அப்டினு ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கை – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அந்த அளவுக்கு சீரியல் சொதப்பலா போயிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் தனியா ஹோட்டல் ஆரம்பிச்ச கதிரும், முல்லையும் வியாபாரத்த எப்படி பெருசாக்குறதுனு யோசிச்சிட்டு இருக்காங்க. இந்த சமயம் முல்லை நாம ஏன் குழந்தைங்களுக்கெல்லாம் டிபன் செஞ்சு கொடுக்க கூடாது அப்டினு ஐடியா குடுக்குறாங்க. உடனே கதிரும் நல்ல ஐடியா தான் செஞ்சு பாப்போம் னு சொல்லறாரு. இதற்கு இடையில் மூர்த்தி வீடு கட்டுறது பத்தி வீட்டுல உள்ள எல்லாரிடமும் கருத்து கேக்குறாரு. நாம ஏன் இந்த வீட்டை இடிச்சிட்டு இங்கயே வீடு கட்டக்கூடாது அப்டினு கேக்குறாரு.

Exams Daily Mobile App Download

அதற்கு அப்புறம் இல்ல வீட இடிச்சிட்டு கட்டுறது எல்லாம் சரி வராது அப்படின்னு முடிவு பண்ணுறாரு மூர்த்தி. இதை அடுத்து வீட்டை விற்கும் முயற்சியில் மீண்டும் களமிறங்குகின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். இந்த நிலையில் மூர்த்தி வீட்டுக்கு வரும் மீனாவோட அப்பா, இந்த வீட நானே வாங்கிக்கிறேன் எவ்வளவுன்னு சொல்லுங்க அப்டினு கேக்குறாரு. உடனே வீட்டில் உள்ள எல்லாரும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நிக்கிறாங்க. இன்னொரு பக்கம் மூர்த்தி தீவிரமா யோசிச்சிட்டு இருக்காரு. இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலோட ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!