பாக்கியாவுடன் ராதிகா இருப்பதை பார்த்துவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

0
பாக்கியாவுடன் ராதிகா இருப்பதை பார்த்துவிடும் மூர்த்தி - சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவுடன் ராதிகா இருப்பதை பார்த்துவிடும் மூர்த்தி - சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவுடன் ராதிகா இருப்பதை பார்த்துவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியாவின் வீட்டை விட்டு ராதிகா கிளம்பியதும் கோபி ராதிகாவை சந்தித்து பேசி கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராதிகாவும், கோபியும் நெருக்கமாக நின்று பேசுவதை மூர்த்தி பார்த்து அதிர்ச்சியாகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக லட்சக்கணக்கான பொய்களை கூறி தப்பித்து வந்த கோபி தற்போது மாட்டும் நேரம் வந்து விட்டது. ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். ராதிகாவின் கண்ணில் சிக்கிவிட கூடாது என்பதற்காக மீட்டிங் இருக்கிறது என பொய் சொல்லி மாடிக்கு சென்று கதவை பூட்டி கொள்கிறார். கோபியை எப்படியாவது மாட்ட வைக்க வேண்டும் என ராமமூர்த்தி தாத்தா முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதாவது, பாக்கியாவின் கணவரை பார்த்ததே இல்லை தானே. பார்த்து விட்டு செல் என ராதிகாவிடம் தாத்தா கூறுகிறார். பின்பு கோபியை கூப்பிட இனியா மாடிக்கு வருகிறார். ஆனால் எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. தயவு செய்து என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி கத்துகிறார். பாக்கியாவும் கோபியை கூப்பிட மேலே வருகிறார். பாக்கியாவையும் கோபி திட்டி அனுப்பி வைத்து விடுகிறார். எனக்கு நேரமாகி விட்டது, பாக்கியாவின் கணவரை இன்னொரு முறை வந்தால் பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை – அறிமுகமாகும் ஆலியா!

ராதிகா கிளம்பியதுமே கோபி ரூமை விட்டு வெளியே வருகிறார். மூர்த்தி, கதிர், ஜீவா என அனைவர்க்கும் கோபி மீது சந்தேகம் வருகிறது. கோபி ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறார்கள். பின்பு கடைக்கு போய் பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வருகிறேன் என கிளம்புகிறார். எதற்காக சம்மந்தமில்லாமல் நடந்து கொள்கிறார் என குடும்பத்தினர்கள் யோசிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியே வந்ததுமே ராதிகாவிடம் உன் தோழியை பார்க்க தான் வந்தேன் அதற்குள் நீ கிளம்பி விட்டாயா என கூறுகிறார். இந்நிலையில், ராதிகாவுடன் கோபி நெருக்கமாக நின்று பேசுவதை மூர்த்தி பார்த்து அதிர்ச்சியடைகிறார். இதற்காக தான் ராதிகா வரும் போது கோபி கீழே வரவில்லையா என மூர்த்தி நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here