ராதிகாவிடம் கோபி பற்றிய உண்மையை கூறிய மூர்த்தி, தனம் – மகா சங்கமத்தில் பரபரப்பான திருப்பங்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ராதிகா இருவரும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை மூர்த்தி தெரிந்து கொண்ட நிலையில், இதனால் குடும்பத்தில் அடுத்து நிகழப்போகும் பூகம்பம் தான் அடுத்த வாரத்திற்கான கதைக்களமாக உள்ளது.
மூர்த்தியின் கோவம்:
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் முதல் மகாசங்கமம் எபிசோடுகள் நடந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் சேர்ந்து எபிசோடுகள் மிகவும் கலகலப்பாக சென்று வந்தது. தாத்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு தான் ஊரிலிருந்து மூர்த்தியின் குடும்பம் வந்திருந்தார்கள். தற்போது தாத்தாவின் பிறந்த நாள் முடிந்து அவர்கள் ஊருக்கு கிளம்ப தயாராகி கொண்டிருக்கின்றனர்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் அடுத்த இரண்டு ட்விஸ்ட்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோபி ராதிகாவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து விடுகிறார். அதைப்பற்றி தனத்திடம் சொல்லும் போது தான் அவரும், எழில் மற்றும் செல்வி சொல்லிய விஷயங்களை கூறுகிறார். இதனால் சந்தேகம் அடைந்த மூர்த்தி நேரடியாக ராதிகாவின் வீட்டில் சென்று இதை பற்றி கேட்க முடிவு செய்து, தனத்துடன் செல்கிறார். அங்கே சென்ற பிறகு ராதிகாவிற்கு கோபி தான் பாக்கியாவின் கணவர் என்ற விவரம் தெரிய வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் ராதிகாவிடம் கோபியை பற்றிய விவரத்தை கூற மூர்த்தி முயற்சி செய்கிறார். வீட்டில் வந்து கோபியிடம் இதை பற்றி கேட்கும் போது பெரிய சண்டை நடக்கிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரிடமும் மூர்த்தி விஷயத்தை சொல்கிறார். மேலும், ராதிகாவிடமும் நேரில் சென்று கோபியை பற்றி சொல்லுகிறார். இதனால் பாக்கியா, ராதிகா மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு நடக்கும் விபரீதங்கள் தான் அடுத்த வார கதைக்களமாக வர உள்ளது.