
மீண்டும் கவலைக்கிடமாகும் மூர்த்தியின் உடல்நிலை, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
மூர்த்திக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து தற்போது தான் கண் முழித்துள்ளார். தற்போது மீண்டும் மூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது போன்றும், குடும்பத்தினர்கள் பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் முல்லையின் கர்ப்பத்தை வைத்து சீரியலை ஒட்டிக்கொண்டிருந்ததால் ஓரளவுக்கு ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது முல்லையும் கதிரும் கோபப்பட்டு வீட்டை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். முல்லையும் கதிரும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதுமே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது.
Exams Daily Mobile App Download
மூர்த்தி மீண்டும் குணமாகி வீட்டிற்கு வருவாரா என ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மூர்த்திக்கு இதயத்திற்கு பக்கத்திலே 2-பிளாக் இருக்கிறது எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூர்த்தியை காப்பாற்ற முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், சிகிச்சைக்கு 2 லட்சம் வரை செலவாகும். எவ்வளவு சீக்கிரமாக பணத்தை மருத்துவமனையில் கட்டுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக மூர்த்தியின் உயிரை காப்பாற்ற முடியும் என கூறிவிட்டு செல்கின்றனர். அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது என குடும்பத்தினர் அல்லாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஜனார்த்தனன் அந்த இரண்டு லட்ச ரூபாயை கொடுக்கிறார். இவரால் தான் குடும்பம் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. மீண்டும் இவரிடம் பணம் வாங்க வேண்டுமா என குடும்பத்தினர்கள் யோசித்தாலும் தற்போதைக்கு மூர்த்தியின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக 2 லட்ச ரூபாயை வாங்கிக் கொள்கின்றனர்.
மூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததுமே கதிரும் முல்லையும் மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆனால், பிடிவாதமாக கதிர் வீட்டிற்கு வரவே மாட்டேன் என நிற்கிறார். மேலும், ஜனார்த்தனன் மூர்த்தியின் மருத்துவ செலவுக்காக செலவு செய்த இரண்டு லட்ச ரூபாயையும் நானே திருப்பித் தருகிறேன் என்று சவால் விடுகிறார். தற்போது மூர்த்திக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து கண் முழித்துள்ளார். இருப்பினும் மருத்துவமனையில் வைத்தே ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்கும் போது மூர்த்திக்கு மறுபடியும் ஏதேனும் பிரச்சனை வர இருக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.