IPL லீக் 2022: மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போட்டி அட்டவணை வெளியீடு!

0
IPL லீக் 2022: மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - போட்டி அட்டவணை வெளியீடு!
IPL லீக் 2022: மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - போட்டி அட்டவணை வெளியீடு!
IPL லீக் 2022: மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தற்போது 15வது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் மொத்த ஆட்டங்களின் விவரம் தொடர்பான முழு அட்டவணையையும் இப்பதிவில் காணலாம்.

மும்பை இந்தியன்ஸ்

IPL போட்டிகளில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வரும் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தற்போது 15வது சீசனுக்கு தயாராகி வருகிறது. மெகா ஏலத்தில் சுமார் 21 வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து தனது அணிக்கு சொந்தமாக்கிய MI நிர்வாகம் இந்த முறையும் அதிக பலத்துடன் தனது போட்டிகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 26 முதல் துவங்க இருக்கும் IPL போட்டிகள் மே மாதம் 29ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

IPL 2022: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் KKR! முழு அட்டவணை இதோ!

இந்த முறை 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகளின் அனைத்து ஆட்டங்களும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து மட்டுமே நடத்தப்பட இருக்கிறது. குறிப்பாக வான்கடே மற்றும் டிஒய் பாட்டீல் மைதானத்தில் தலா 20 போட்டிகளும், பிரபோர்ன் மைதானம் மற்றும் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் தலா 15 ஆட்டங்கள் உட்பட நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன் படி 15வது IPL சீசன் துவங்க இன்னும் ஒரு சில வாரமே இருக்கும் நிலையில் IPL போட்டிகளுக்கான ஆட்டங்கள், நேரம், இடம் குறித்த போட்டி அட்டவணையை BCCI நேற்று (மார்ச்.6) வெளியிட்டுள்ளது.

இப்போது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 27 அன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக தங்களது முதல் ஆட்டத்தை துவங்க இருக்கிறது. தொடர்ந்து இந்த அணிகள் கலந்து கொள்ளும் போட்டிகளின் அட்டவணையை இப்பதிவில் விரிவாக காணலாம்.

மும்பை இந்தியன்ஸ்:
  • மார்ச் 27 – மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
  • ஏப்ரல் 2 – மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • ஏப்ரல் 6 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 9 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 13 – மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • ஏப்ரல் 16 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஏப்ரல் 24 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • ஏப்ரல் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • மே 6 – குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • மே 9 – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • மே 12 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • மே 17 – மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • மே 21 – மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்
அணி வீரர்கள் விவரம்:
  • ரோஹித் சர்மா
  • சூர்யகுமார் யாதவ்
  • கீரன் பொல்லார்ட்
  • ஜஸ்பிரிட் பும்ரா
  • இஷான் கிஷான்
  • டெவால்ட் ப்ரீவிஸ்
  • பசில் தம்பி
  • முருகன் அஷ்வின்
  • ஜெய்தேவ் உனட்கட்
  • மயங்க் மார்கண்டே
  • என் திலக் வர்மா
  • சஞ்சய் யாதவ்
  • ஜோஃப்ரா ஆர்ச்சர்
  • டேனியல் சாம்ஸ்
  • டைமல் டேவிட்
  • டிம்மல் மில்ஸ்
  • அன்மோல்ப்ரீத் சிங்
  • ரமன்தீப் சிங்
  • ராகுல் புத்தி
  • ஹிருத்திக் ஷோக்கீன்
  • அர்ஜுன் டெண்டுல்கர்
  • ஃபேபியன் ஆலன்
  • ஆர்யன் ஜூயல்
  • ரிலே மெரிடித்

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!