மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளேயிங் XI அணியில் சாம்ஸுக்கு பதிலாக முக்கிய மாற்றம்?

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளேயிங் XI அணியில் சாம்ஸுக்கு பதிலாக முக்கிய மாற்றம்?
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளேயிங் XI அணியில் சாம்ஸுக்கு பதிலாக முக்கிய மாற்றம்?
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளேயிங் XI அணியில் சாம்ஸுக்கு பதிலாக முக்கிய மாற்றம்?

IPL கிரிக்கெட் போட்டியில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தொடக்க ஆட்டத்தில் DCயிடம் தோல்வியை தழுவியது. இப்போது MI அணிக்கான அடுத்த ஆட்டத்தில் பந்து வீச்சு பகுதியில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2022 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தனது முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கியது. IPL போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் (MI) கடந்த 9 சீசன்களாக தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. அதனால் 2022ம் ஆண்டுக்கான சீசனில், மார்ச் 27 அன்று நடைபெற்ற முதல் போட்டியில் MI அணி அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இந்த போட்டியிலும் 10வது முறையாக தோல்வி தழுவி இருக்கிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் சம்பள உயர்வு அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!

குறிப்பாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக, 48 பந்துகளில் 81* ரன்கள் எடுத்த இஷான் கிஷன் மற்றும் ரோஹித்தின் அற்புதமான ஆட்டத்தின் பின்னணியில் மும்பை இந்தியன்ஸ் 177 ரன்கள் எடுத்தனர். இதில் இளம் வீரர், திலக் வர்மா தனது ஐபிஎல் வாழ்க்கையை சிறப்பாக ஆரம்பித்து, நடுத்தர ஓவர்களில் அணியை நல்ல ரன் ரேட்டில் வழிநடத்தினார். பந்துவீச்சு பிரிவில், அறிமுக நாயகன் பசில் தம்பி மற்றும் முருகன் அஸ்வின் போன்றவர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். அதே சமயம் டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடுகள் மிகக் குறைவாகவே இருந்தன.

ஏனெனில் அவர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இந்த ஆட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளரும், MI அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜஸ்பிரித் பும்ராவின் வேகம் சுத்தமாக எடுபடவில்லை. இதில் குறிப்பாக, டேனியல் சாம்ஸ் நான்கு ஓவர்களில் 57 ரன்களை விட்டுக்கொடுத்து, அணியின் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைய முக்கிய காரணமாக மாறினார். இப்படி முடிந்தது முடிந்த கதையாக இருக்க, இரண்டாவது போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ், பிளேயிங் XI அணியில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் MI அணியில் டேனியல் சாம்ஸுக்கு மாற்றாக களமிறக்க வாய்ப்புள்ள 3 வீரர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

ரிலே மெரிடித்

பிக் பாஷ் லீக்கின் கடந்த சில சீசன்களில் விளையாடி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் ரிலே மெரிடித். பல ஆண்டுகளாக, பந்து வீச்சில் அவர் காட்டி வரும் வேகம் எதிரணி வீரர்களை பயமுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தவிர 2018-19க்கான பிபிஎல் சீசனில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு பிளேஆஃப்ஸ் இடத்தை பிடிக்க உதவிய பெருமை ரிலே மெரிடித்தை சார்ந்தது. இவரது IPL வாழ்க்கையை பொறுத்தமட்டில், வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் 2021 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போது 2022 சீசனில் மெரிடித்தின் வேகப் பந்துவீச்சை வலுப்படுத்த மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர் IPL 2022 ஏலத்தில் அடிப்படை விலையான 1 கோடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து மும்பை மைதானங்களிலும் இவரது வேகம் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 போட்டியில் அவரது ஃபார்மை பார்க்கும்போது, மெரிடித் அவரது சக ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸுக்கு மாற்றாக இருக்க முடியும்.

ஃபேபியன் ஆலன்:

ஃபேபியன் ஆலன், ஒரு இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்து வீச்சாளர் மற்றும் கீழ் வரிசையில் ஒரு பயனுள்ள பேட்டர் ஆவார். வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவத்தில் ஒரு அனுபவமிக்க வீரரான இவர் கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கிய 2017 சீசன் முதல் டி20 வடிவத்தில் விளையாடி வருகிறார். பல ஆண்டுகளாக, அவர் ஐபிஎல், பிபிஎல் மற்றும் பிஎஸ்எல் போன்ற மற்ற டி20 லீக்குகளிலும் இடம்பெற்றுள்ளார். ஃபேபியன் ஆலன் கடந்த ஐபிஎல் 2021ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இடம்பெற்றார். இப்போது MI அணி ஒரு சுழற்பந்து வீச்சாளரை கொண்டு வர முடிவு செய்தால், ஃபேபியன் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.

ஜெய்தேவ் உனட்கட்:

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன ஜெய்தேவ் உனட்கட் இந்தியன் பிரீமியர் லீக்கில் அனுபவம் வாய்ந்தவர். பல ஆண்டுகளாக, அவர் டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பல அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி இருக்கிறார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் அவர் 60 IPL போட்டிகளில் விளையாடி மொத்தம் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 2017 சீசனில், உனட்கட் 12 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி இறுதிப் போட்டிக்கு வர உதவியாக இருந்தார். அதனால் இவரும் டேனியல் சாம்ஸுக்கு சிறந்த மாற்றாக இருக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!